வெற்றிகரமாக நடைபெற்ற மாவனல்லை இரத்த தான முகாம்

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மாவனல்லை கிளையுடன் மாவனல்லை சுகாதார வைத்திய அலுவலகமும் இணைந்து ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் இன்று (07) மாவனல்லை ராழியா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த இரத்த தான முகாமில் மொத்தமாக 528 பேர் கலந்து கொண்டனர் இதில் 128 பெண்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்நிகழ்விற்கு மாவனல்லை பிரதேச வாழ் மக்கள் இன மத பேதமின்றி பெரும் ஆர்வம் காட்டியதுடன், இதில் பலர் நேரமின்மை காரணமாக திருப்பி அனுப்பப்பட்டதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த இரத்த தான முகாமிற்கு மாவனல்லை, கண்டி, கம்பளை, பேராதனிய, கேகாலை, நாவலப்பிடிய வைத்தியசாலையின் இரத்த தான வங்கிகள் கலந்து கொண்டிருந்தது.

இந்த இரத்த தான முகாமிற்கு விஷேட அதிதிகளாக சுகதாரா பிரதி அமைச்சர் லலித் டிசானாயாக, வைத்தியர் ஆறியசேன கமகே, மாவனல்லை வைத்திய அதிகாரி, மாவனல்லை பிரதேச சபை தலைவர் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

10805610_644825868962422_7847894084463877003_n-1417962225649 10846180_644824045629271_4844346255826755470_n-1417962229491 10846390_644922298952779_5062447157622952715_n-1417962234315 10410615_644826585629017_4742724551480303588_n-1417962222134 10174921_644826162295726_320484175721860563_n-1417962217700

10174921_644826162295726_320484175721860563_n

10410615_644826585629017_4742724551480303588_n

10805610_644825868962422_7847894084463877003_n

10846180_644824045629271_4844346255826755470_n

10846390_644922298952779_5062447157622952715_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *