வெற்றிகரமாக நடைபெற்ற SLJI மாவனல்லை கிளையின் இரத்த தான முகாம்

இலங்கை ஜமாதே இஸ்லாமி மாவனல்லை கிளையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இரத்ததான முகாம் அல்லாஹ்வின் கிருபையினால் இம்முறை 10வது தடவையாக, 2015 டிசமபர் 13 ம் திகதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாவனல்லை ராலியா வரவேற்பு மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமில் மொத்தமாக பதிவுசெஇயப்ட்ட 641 பேரில் 570 பேர் இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும் இவர்களுள் 153 பெண்களும், 417 ஆண்களும், ஆவர். இந்நிகழ்வில் சிங்கள சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தமை மற்றுமொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம் (Minister of Public Enterprise Development) கலந்துகொண்டதோடு, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லலித் திசாநாயக அவர்கள் , டாக்டர் கமகே அவர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் A.C.M அஸ்கர் ஆகிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் கபீர் ஹாஷீம் அவர்கள் தனது சிறப்புறையின் போது இரத்தானத்தின் முக்கியத்துவம் மற்றும் பல்லின மக்கள் வாழும் இலங்கை திருநாட்டின் இன நல்லினக்கத்க்கு எந்தளவு தூரம் உறுதுணையாக அமைகிறது என்பதை வலியுறித்தினார்.

மாவனல்லை, கேகாலை, கண்டி, மாத்தளை, கம்பொலை, நாவலபிட்டிய ஆகிய இரத்தவங்கிகள் இங்கு பங்குபற்றி தமது சேவையை வழங்கினர்., மற்றும் இங்கு பெறப்பட்ட இரத்த பைண்டுகள் மேற்குறிப்பிட்ட இரத்த வங்கிகளுக்கு எடுத்து செல்லப்பட்டன. இரத்தம் அதிகமாக தேவைப்படும் இக்கால கட்டத்தில் இந்நிகழ்ச்சி ஒழுங்கு செய்யபடிருந்தமை பெரும் உதவியாக அமைந்திருந்தது என பிரதம மருத்துவர் தனது நன்றி உரையின் போது குறிப்பிட்டார்.

-Media Unit SLJI Mawanella – Mohamed Nuzrath-

12341484_1037291782959024_6297431442688229436_n 12341487_1037333266288209_5483495964893655217_n

12341017_1694026990815462_7890808404888931955_n_DSC0045 _DSC0053 _DSC0061 _DSC0107 _DSC0120 _DSC0134 _DSC0145

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares