ஸவாஹிர் ஹாஜியார் காலமானார்

சப்ரகமுவ மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், மாவனல்லை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், கண்டி “ஜே டெக்ஸ்’ உரிமையாளருமான பிரபல வர்த்தகர் ஸவாஹிர் ஹாஜியார் இன்று அதிகாலையில் காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னாஇலாஹி ராஜிஊன்)

அவர் ஊரின் நலனுக்காகவூம் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளி வாயலின் அனைத்து வேளைத்திட்டங்களின் முன்னேற்றத்திற்காகவூம் கடுமையாக உழைத்த ஒரு சமூக சேவையாளராவார்.

இவர், தொடர்ந்து ஒரு தசாப்தத்துக்கு மேற்பட்ட காலம் மாவனல்லை, கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவனல்லை, கிருங்கதெனிய முஸ்லிம் மையவாடியில் இவரது ஜனாஸா இன்று முற்பகல் 11.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares