ஸாஹிராக் கல்லூரி 79ஆவது வருட பழைய மாணவர் சங்க வர்ண இரவு

5மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி 79ஆவது வருட பழைய மாணவர் சங்கத்தின் வர்ண இரவு மற்றும் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் கே. எம். பௌமி ஆசிரியரின்  வழிகாட்டலிலும், 79ஆவது வருட பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ரமீஸ் அன்சார் தலைமையிலும் இந்நிகழ்வுகள் நடைபெற்றன. இதில்  2009 சாதாரண தரப் பரீட்சை, 2012 உயர்தரப் பரீட்சை எழுதி கல்லூரியை விட்டு வெளியேறிய 79ஆவது வருட  பழைய மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்திருந்தனர்.
1
 இதன்போது, நடப்பாண்டுக்கான செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், யாப்புத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அது தவிர, 79ஆவது வருட பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ ரீசேட் சங்கத்தின் தலைவர் ரமீஸ் அன்சார், உபதலைவர் ராயிஸ் ரஹ்மதுல்லாஹ், பொதுச் செயலாளர் ராயிஸ் ஹஸன், பொருளாளர் அஐமன் சலாம் உள்ளிட்ட நிர்வாக அங்கத்தவர்களினால் வெளியிடப்பட்டன.
மாணவர்களை மாத்திரம் கொண்டு இயங்கும் இச்சங்கமானது, கல்லூரி அபிவிருத்தி, சமூக செயற்பாடுகள் மற்றும் நண்பர்கள் நலம்சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றது. அத்துடன், மாணவர் சுற்றுலா, சிரமதானம், கருத்தரங்குகள், வருடாந்த ஒன்றுகூடல் போன்ற பல்வேறு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து வருகின்றது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கல்விகற்ற மாணவர்களுக்கிடையே தொடர்புகளைப் பேணுதல், வெளிநாடுகளில் வசிக்கும் மாணவர்கள் மூலம் பாடசாலை சமூகத்துக்கு உதவிகளை மேற்கொள்ளல் மற்றும் துறைசார்ந்தவர்களைக் கொண்டு சமூக சேவைகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களைக் கொண்டு இவ்வமைப்பு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 2
மாவனல்லை ஆர்.எஸ். மஹீ

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *