ஸாஹிரா பழைய கடெட் மாணவர்களின் மனிதநேய செயற்பாடு

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி தனது கல்விசார் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இணைப்பாடவிதான செயற்பாடுகளின் மூலம் தனது நேசக்கரத்தினை ஏனைய பாடசாலைகளுக்கு வியாபித்துள்ளது.

ஸாஹிராக் கல்லூரியின் பழைய கடெட் மாணவர் அமைப்பு Hike For Humanity – மனித நேயத்திற்காக மலையேறுதல் எனும் தொனிப்பொருளில் கடந்த 15 மற்றும் 16 திகதிகளில் யடியந்தோட்டை வெவல்தலாவ கிராமத்திலுள்ள வெவல்தலாவ தமிழ் மத்திய மகா வித்யாலத்திற்கு இலவச அப்பியாச புத்தகம் மற்றும் பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

யடியந்தொட்டையிலிருந்து சுமார் 30 km தூரத்திலுல்ல வெவல்தலாவ எனும் இவ்வழகிய கிராமம் ஒரு மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது. ஸாஹிராக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பழைய கடெட் மாணவர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட அப்பியாசப் புத்தகங்களும் பாடசாலை உபகரணங்களும் வெவல்தலாவ த.ம.ம.வித்தியாலத்தில் கல்வி பயிலும் 55 மாணவர்களிற்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது வெவல்தலாவ த.ம.ம.வி அதிபர் திரு.மகேந்திரன் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன்போது மாணவர்களது விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இனங்களிற்கிடையே நல்லுறவை ஏற்படுத்தவும் ஏனைய சக மாணவர்களிற்கு உதவும் நன்னடத்தையினை பயிற்றுவிக்கவும் ஸாஹிராக் கல்லூரியின் மனிதநேயத்திற்காக மலையேறுதல் எனும் இம்முயற்சி காலத்தின் தேவைக்கேற்புடையதாகும்.

1530449_752726198088338_1969895641_n 1521663_752726004755024_1874924495_n 1472837_752727271421564_361637735_n 1510018_752726674754957_479220661_n 1526925_752726298088328_1941148218_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares