ஹஜ் கோட்டவும் ஹஜ் முகவர்கள் சங்கங்களும் பொதுபலசேனாவும்

பொதுபலசேனா அமைப்பிற்கும் ஹஜ் முகவர்கள் சங்கத்திற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்றுகாலை இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே கருத்து தெரிவிக்கையில்:

“ஹஜ் விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் சென்ற குழுவினர் நேற்றிரவு என்னுடன் தொடர்புகொண்டு சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கமைய இந்த சந்திப்பு இன்று காலை ஏற்பாடாகியிருந்தது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளார் கலகொட அத்தே ஞானசார தேரரின் அனுமதியுடனான இந்த சந்திப்பு ராஜகரியவிள் இடம்பெற்றது.

Dilantha-Withanage

தற்போது ஹஜ் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த விடயத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும் முஸ்லிம் சமயத் தலைவர்களை உள்ளடக்கிய அமைப்பு மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை இந்த விடயத்தில் சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் ஆலோசனை வழங்கினோம்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் குறித்த குழுவினருடன் நாம் ஏற்கனவே பேசியுள்ளோம். எனினும் எமக்கு அவர்களிடமிருந்து சதகாமான பதில் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே இன்று நாங்கள் உங்களை நாடியுள்ளோம். இந்த விடயத்தில் எமக்கு தீர்வொன்றினை பெற்றுத் தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும் இந்த கோரிக்கை தொடர்பில் நாங்கள் இதுவரை எந்தவித இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.

காரணம் இது முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விடயமாகும். அத்துடன் இந்த விடயத்தில் தலையிடுவது தொடர்பில் எமது அமைப்பிற்கு இதுவரை எந்த நோக்கமுமில்லை. ஆனால் ஹஜ் விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பின்பற்ற வேண்டும்” என்றார்.

அமைச்சர் பௌசியின் ஹஜ் கோட்டா பட்டியலை அமுல்படுத்துமாறு ஆலோசனை – புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர்

இதேவேளை சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையிலான ஹஜ் குழுவினால் வெளியிடப்பட்ட ஹஜ் கோட்டா பட்டியலை அமுல்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

10-021

இந்த ஆலோசனை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எம்.திசாநாயகவிற்கு நேற்று வழங்கப்பட்டது. சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையிலான ஹஜ் குழுவினால் ஹஜ் கோட்டா பங்கீட்டு பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

எனினும் இந்த பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 ஹஜ் முகவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் குறித்த பட்டியலினை அமைச்சர் பௌசி சவூதி அரேபியாவிற்கு அனுப்பினார். இவ்வாறான நிலையில் புதிய பட்டியலொன்றை தயாரித்து சவூதி அரேபியாவிற்கு அனுப்புமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எம்.திசாநாயகவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பிரகாரம் புதிய ஹஜ் கோட்டா பட்டியலொன்றை புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எம்.திசாநாயக்க தயாரித்து சவூதி அரேபியாவிற்கு அனுப்பினார். இந்த நிலையில் ஏற்கனவே அமைச்சர் பௌசியினால் தயாரிக்கப்பட்ட பட்டியலே சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூளர் ஜெனரல் வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்தார்.

இந்த விபரம் வெளிவிவகார அமைச்சினால் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எம்.திசாநாயக்கவிற்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எம்.திசாநாயக்க சட்டமா அதிபருக்கு கோரிக்கை விடுத்தார்.

இதனை விரிவாக ஆராய்ந்த சட்டமா அதிபர், அமைச்சர் பௌசியினால் ஏற்கனவே தயாரித்து அனுப்பிய ஹஜ் கோட்டா பட்டியலை அங்கீகரிக்குமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எம்.திசாநாயக்கவிற்கு இன்று ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஹஜ் விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த குழுவினரே பொதுபலசேனா அமைப்பினை இன்று காலை சந்தித்ததாக அந்த அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாம் திட்டமிட்டு பொதுபல சேனாவைச் சந்திக்க வில்லை – செரண்டிப் ஹஜ் உம்றா சங்கம்

நாங்கள் திட்டமிட்டு பொதுபல சேனாவைச் சந்தித்து எம்முடைய ஹஜ் பிரச்சினையை முறையிடவில்லை. எதேட்சையாக சந்தித்தபோதே கதைத்தோம் என செரண்டிப் ஹஜ் உம்றா சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து செரண்டிப் ஹஜ் முகவர் என்.எம் ரவல்ஸ் உரிமையாளர் முஹம்மத் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Address-by-the-Association-President-M.S.H

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேற்றுக் காலை நாங்கள் ராஜகிரிய பள்ளிவசால் அருகில் எமது வாகனத்தை நிறுத்திவிட்டு எமது சக நண்பர்களுடன் நிற்கும்போது, தற்செயலாகவே பொதுபலசேனாவின் பணிப்பாளர் டிலந்த விதானகேயைச் சந்தித்தோம். அவரே உங்களது ஹஜ் விடயமாக நீங்கள் பேசியதை தொலைக்கட்சி ஊடக கண்டேன் என வினவினார். இதன்போதே நாம் அவரிடம் இது தொடர்பில் குறிப்பிட்டோம்.

இந்த செய்தி முழுநாடும் அறிந்த ஒரு விடயம். என்ன நடந்தது என்பது குறித்து ஊடகங்களில் தெளிவாக வெளியிடப்பட்டிருந்தன. நாங்கள் ஒருபோதும் பொதுபல சேனாவிடம் சென்று வேண்டுமென்டு சொல்லவில்லை.

இந்தப் பிரச்சினையை நீங்கள் ஏன் உலமா சபையிடமோ ,முஸ்லீம் அரசியல் தலைவர்களிடமோ தெரியப்படுத்தவில்லை என்று கேட்டார். அதற்கு நாம் இது குறித்து பல தடைவ சொல்லியும் எவ்வித பலனும் கிடைக்க வில்லை என்று அவரிடம் தெரிவித்தோம்.

இவ்விடயம் உங்களது உள்விடயம். இதில் நாங்கள் தலையிடமாட்டோம் எனக் கூறிவிட்டு, ஹஜ் விடயம் பற்றி நடைபெறும் நிலவரங்களை அவர் எம்மிடம் விரிவாக கேட்டறிந்து கொண்டார். இதனையே அவரும் சில இணையத்தளங்களுக்கு சொல்லியிருக்கின்றார். இதுவே உண்மை எனவும் செரண்டிப் ஹஜ் உம்றா சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

You may also like...

3 Responses

 1. நண்பன் says:

  // இதில் நாங்கள் தலையிடமாட்டோம் என்று தெரிவித்ததுடன்//
  அவன் ஏண்டா தலையிடப்போறான் அதுதான் அவன் செய்யவேண்டிய வேலைய அவனை விட ரொம்ப நல்லா நீங்களே செய்றீங்களே….

  //அப்போதே ஹஜ் விவகாரங்கள் அமைச்சர் பெளசியின் ஹஜ் முறைகேடுகள் அதன் பின்னர் நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் அதனயும் மீறி அமைச்சர் பெளசி செயற்பட்டதையும் அவரிடம் நாங்கள் கூறினோம்..//

  அடச் சீ தூ நாதாரிகளா………. திலந்த விதானகேயே நாடி நரம்பெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரா துவேசம் ஊறின நாயி அவன்கிட்ட இதெல்லாம் எதுக்குடா பேசுறீங்க…… நீ தற்செயலா கண்ட உடனே இம்புட்டு பேசினியா…?

  தற்செயலா கண்டியோ இல்ல தண்ணியடிச்சுட்டுப் போயி ஒளறினியோ… யாரார்கிட்ட போயி கதைக்கிறதுன்னு ஒரு வெவஸ்தை வேணாமாடா பக்கி..

  குஜராத்ல மோடி செய்த முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் பற்றி நெதன்யாஹு கிட்ட முறையிட்ட மாதிரி இருக்கு உங்க மொக்குத் தனம்.

  ”நாங்கள் ஒரு போது எங்களது சுய இலாபத்திற்காக எமது மதத்தையும் முஸ்லிம் சமூகத்தையிம் காட்டிக்கொடுக்கவில்லை.” அதான் காட்டியும் கூ…… கொடுத்துட்டியே இனியென்ன…….

  எனக்கு இவனுங்கள பச்சை பச்சையா திட்டனும்னு தோணுது…. ஆனால் Bad words பெருசா தெரியாததுன்னால இந்தளவோட விட்டுர்ரன். உலகத்துல இருக்குற அத்தனை கெட்ட வார்த்தையும் நான் உனக்கு சொன்னதா நினைச்சுக்கோடா…..

  இந்த மாதிரி வயிறு வளர்க்குற ஹஜ் முகவர்களின் பணத்தாசையால எத்தனையோ நடுத்தர மக்களின் ஹஜ் கனவு கனவாவே போயிட்டிருக்கு…
  இந்த மொக்கு அரசியல்வாதிகளும் சரி இந்த விளாங்கா ஏஜெண்டுக்காரனுங்களும் சரி எதெதுல பணம் பாக்குரண்டு வெவஸ்தையே இல்லாம திரியுரானுங்க…

 2. Jainul Faris says:

  Please don’t use these agencies, It’s Haram.

 3. முமீன் says:

  ஹஜ் முகவர்களில் பெரும்பாலானவை நிபாக் எனப்படும் நயவஞ்சகத்துடன் செயல்படுவது மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக நீண்ட கால சூழ்ச்சித் திட்டத்துடன் சமூகத்தைக் கருவறுக்கும் பணிக்கு பலு சேனாவுக்கு தகவல்களையும் வழங்கும் இந்தக் கூட்டங்கள் சமூகத்தின் புல்லுறுவிகள் என்பதையும் வர்த்தக நோக்கத்துடன் ஹஜ் கடமையை அரசியல் மயப்படுத்தி அதன் துய்மையையும் இல்லாமல் செய்யும் முற்றிலும் அல்லாஹ்வுக்கு எந்நவிதமான அச்சமும் இல்லாதவர்கள் என்பது அவர்களின் செயல் மூலம் தெளிவாகத் தென்படுகின்றது. நான் இதைக் கூறும்போது நிச்சியம் எதிராக உள்ள அரசியல் வாதிகளின் செயற்பாட்டை எந்தவகையிலும் ஆதரிப்பவனல்ல என்பதையும் வலியுறுத்திக்கூறுகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares