“ஹலால்’ போர்வையில் இன ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் – ரவூப் ஹக்கீம்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் முக்கியமான மாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கின்ற நிலையில் ஹலாலுக்கு எதிரான செயற்பாடு என்ற போர்வையில் நாட்டின் அமைதிக்கும் இனங்களின் ஒற்றுமைக்கும் குந்தகத்தை ஏற்படுத்த யாரும் முற்படக்கூடாதெனத் தெரிவித்த நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்ஹக்கீம் ஹலால் தொடர்பில் சிறுகுழுவினரின் கருத்தல்ல. முழுநாட்டு மக்களின் கருத்துகளும் அறியப்படவேண்டும் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பௌத்த விகாரைகள் தொடர்பான  திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்;
ஹலால் என்றதொரு விடயத்தை முன்வைத்துநாட்டில் முஸ்லிம்களுக்கு      எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும்  நடவடிக்கைகள் வேதனையளிக்கின்றன.

அண்மைக்காலமாக ஹலாலை முன்வைத்துபொதுபல சேனா என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை.  ஹலால் தொடர்பில் பொதுபலசேனாவினால் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமானால் அது குறித்து முழு நாட்டினதும் கருத்துக்கள் அறியப்படவேண்டும். விவாதங்கள் நடத்தப்படவேண்டும்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கின்ற இன்றைய முக்கிய கால கட்டத்தில் ஹலால் விடயத்தை காரணம் காட்டிநாட்டின் அமைச்சருக்கும் இனங்களிடையே, ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்த யாரும் முற்படக்கூடாது. பொதுபல சேனாவினால் தோற்றுவிக்கப்பட்ட ஹலால் பிரச்சினை தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலரும் தலையீடு செய்து சுமூக நிலை ஏற்படுவதற்கு வழிவகுத்தமைக்கு நாம் நன்றி கூறுகின்றோம். இந்த விடயம் தொடர்பில் நாம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம் என்றார்.

RH71812

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares