ஹிங்குளோயா வட்டாரத்தின் கள நிலவரம்

ஆளும் கட்சியின் பொதுச் செயலாளரின் தொகுதி என்ற வகையில் அதிக இடங்களைப் பெற்று தன் பலத்தை காட்டவேண்டிய கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி, கடந்த பல வருடங்களாக பிரதேச சபையை ஆட்சி செய்த வகையிலும் மகிந்த அணி பிரிந்து சென்ற பின்னர் முஸ்லிம்களிடையேயும் தன் செல்வாக்கு குறையவில்லை என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் சுதந்திர கட்சி, எப்படியாவது இந்த தேர்தலில் தனது 48 இலட்ச வாக்கு வங்கியை குறையாமல் காப்பாற்ற வேண்டிய நிலையில் மகிந்தவின் கட்சி என பிரதான கட்சிகள் மல்லுக்கட்டும் நிலையிலுள்ள மாவனல்லையில் இவற்றிற்கிடையே இரண்டு சுயாதீன குழுக்கள் என களைகட்ட தொடங்கியுள்ளது மாவனல்லை பிரதேச சபைத்தேர்தல்.

அந்த வகையில் பிரதான வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் நிலவரங்களின் தொகுப்பு.

ஹிங்குளோயா வட்டாரம் 

மாவனல்லையின் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி என கூறப்படுவது. 3398 வாக்காளர்களைக் கொண்டிருந்த போதிலும் சுமார் 2900 வாக்குகளே இந்த முறை தமது ஊரின் தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக கருதப்படும் வார்டுகளில் ஹிங்குளோயா பிரதானமானது. முஸ்லிம்கள் வழமை போன்று ஐக்கிய தேசிய கட்சியின் அபிமானிகள்/அனுதாபிகள்/அப்பாவிகள்/விசிறிகள்/ஏமாளிகள் என அடுக்கிக்கொண்டே போக முடியும் என்ற பொது சட்டத்திற்கு ஏற்ப யானை சின்னத்தில் யார் நின்றாலும் வெற்றிபெறலாம் எனக்கூறலாம்.

இம்முறையும் முன்னால் உறுப்பினர் A.C.M அஸ்கர் நிற்கிறார். என்ன சொன்னாலும் “உங்கள் வீட்டுப் பிள்ளை” என இவருக்கான புள்ளடிகள் ஏறாளம் இம்முறையும். ஆனாலும் ஆரம்பகாலங்களில் இவர் மீது ஊர் மக்களுக்காக பிரதானமாக எந்த வேலையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களில் சாஹிரா கல்லூரிக்கு பல கோடி ரூபா பெறுமதியான வளங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

சுதந்திர கட்சியில் M.S.M காமில் அவர்கள் போட்டியிடுகின்றார். நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர், பிரதேச சபையின் தலைவராக, உப தலைவராக இருந்து சேவையாற்றியவர், மாவனல்லை ஸாஹிராவின் வளர்ச்சியில் பங்குபற்றியவர்களில் பொன்னெழுத்துக்களால் பெயரிடக்கூடியவர், ஊர்களுக்குள்ளே அதிக பாதை செப்பனிடும் வேலைகளை செய்தவர் என சாதனைகளை விசிட்டிங் கார்ட்டே மெனு கார்ட் சைஸ்கு பிரின்ட் பண்ணலாம் இவருக்கு. மேலதிகமாக இறுதிக்கட்ட நேரத்தில் கட்சி தாவிய நஸ்லின் உடையார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இவருக்கு பலம் சேர்க்கின்றன. என்ன இருந்தாலும் கடந்த ஓரிரு தேர்தல்களில் இவரின் வாக்கு வங்கி மிகச் சொற்பமே.

சுயாட்சைக் குழுவில் களமிறங்கும் நபீர்கான் அவர்கள் அரசியலில் புது முகம் என்ராலும் மக்கள் சேவையில் நன்கு அறியப்பட்டவர். சுயேட்சைக் குழு தலைவராக களமிறங்கும் இவருக்கு பின்னால் ரிஷாத் பதியுதீன் இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். சமூக சேவை விடயங்களில் காமில் அவர்களை தனியாக நின்று எதிர்க்கும் தைரியசாலி. சமுக விடயங்களில் மக்களோடு மக்களாக நிற்பவர் என்ற வகையில் இவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் அஸ்கர், காமில் என இருவரது வாக்குகளையும் பிரிக்கும். ஒவ்வொரு தொகுதிகளிலும் இந்த சுயேட்சை குழு 100 வாக்குகளைப் பெற்றாலும் போனஸ் ஆசனத்தில் உள்நுளையக்கூடிய வாய்ப்புள்ளவர்.

முன்னைய முடிவுகளை ஒப்பிட்டு பார்த்தால் ஹிங்குளோயாவில் அஸ்கர் வெற்றி பெற்றாலும், போனஸ் ஆசனத்தில் காமில் வருவதில் சந்தேகமில்லை. சுயேட்சைகளின் போனஸ் ஆசனத்தில் நபீர்கான் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நிபந்தனைகளின் பேரில் கட்சி தாவிய நஸ்லின் உடையாரிற்கும் போனஸ் ஆசனம் வழங்கப்பட்டால் 4 பிரதிநிதிகளை கொண்ட வட்டாரமாக ஹிங்குளோயா மாறும்.

இவை எமது அனுமானங்களே. ஆனால் இந்த வேட்பாளர்கள் அனைவரும் இப்போது வீடு வீடாக சென்று மக்களை சந்திப்பதை பார்க்கின்றோம், வாக்குறுதிகள் புதிப்பிக்கப்படுகின்றன, மக்கள் மனநிலை கடைசி நேரம் புள்ளடியிடும் நிலையிலும் மாறக்கூடியது.

அடுத்த தொடரில் கிருங்கதெனிய வட்டாரத்தை ஆராய்வோம்..

You may also like...

1 Response

  1. nawfar siddeek says:

    Good reports above mawanella

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *