ஹெம்மாதகமை குடி நீர் வழங்கல் திட்டம் பொது மக்களின் பாவனைக்கு திறந்து வைப்பு

மாவனல்லை, ஹெம்மாதகமை குடி நீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பின்பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொது மக்களின் பாவனைக்காக கடந்த சனிக்கிழமை (18) கையளித்தார்.

நேதர்லாந்து நாட்டின் நிதியுதவியுடன் அமையப்பெற்றுள்ள இத்திட்டத்தின் மூலம் ஹெம்மாத்தகமை, மாவனல்லை மற்றும் ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களிலுள்ள சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பாவனையாளர்கள் நன்மையடையவுள்ளனர்.

இத்திட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான நேதர்லாந்து தூதுவர், அமைச்சர்களான கபீர் ஹாசிம், ஹரின் பெணான்டோ, பிரதியமைச்சர்களான ரன்ஜன் ராமநாயக்க, சம்பிக்க பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான நலீன் பண்டார, துசித, சுஜித் சன்ஜயா, ஆனந்த அலுத்கமகே, சந்தித் சமரசிங்க, முன்னாள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

-ஷபீக் ஹுஸைன்-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *