ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாற்று நூல் வெளியீடு 8 ஆம் திகதி

 

கல்வியலாளரும் பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம்.ராஸிக் எழுதியுள்ள ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு சமூகவியல் நோக்கு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 8 ஆம் திகதி  ஹெம்மாத்தகம அல்.அஸ்ஹர் கல்லூரியில் நடைபெறும்.

இவ்வாண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் ஹெம்மாத்தகமை அல்.அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவினையிட்டு வெளியிடப்படும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக நகரத்திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமும், கௌரவ அதிதியாக தபால் தபால் சேவைகள், முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் சிறப்பு அதிதியாக அரச தொழில் முயற்சி அமைச்சர் கபீர் ஹாசிமும், மூத்த அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் கலந்துகொள்வார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முன்னாள் பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் நூலைத் திறனாய்வு செய்யவுள்ளார். மேலும் எம்.ஏ.நுஃமான் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எம்.ஐ.எம்.அமீன் முன்னாள் முதுநிலைவிரிவுரையாளரும் சிறப்புரைகளை நிகழ்த்தவுள்ளார்.

ஹெம்மாத்தகமையின் ஆரம்பகாலபட்டதாரிஆசிரியரும் கல்வி நிருவாகசேவை அலுவலருமான எம்.எம். ராஸிக்; எழுதியுள்ள இந்நூலில் ஹெம்மாத்தகமையில் முஸ்லிம்கள் குடியேறியதிலிருந்து அங்கு ஏற்பட்ட சமயரூபவ்கல்விரூபவ்பொருளாதார மற்றும் நிருவாக வாழ்வியலைப் பற்றி இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மடுள்போவையில் ஆரம்பமாகி பின்னர் ஏழு ஊர்களாக வளர்ச்சி கண்டுள்ள இப்பிரதேசத்தின் சமய வாழ்க்கைக்குப் பங்களிப்புச் செய்த பெரியார்கள் மற்றும் கல்வித் துறையின் வளர்ச்சி பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக 1917 ஆம் ஆண்டு அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலை 2017 இல் நூற்றாண்டைக் கொண்டாடுகின்றது. இந்நிலையின் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், பட்டதாரிகள், கலாநிதிகள், வைத்தியர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள் என பல்வேறு துறைகளிலும் முன்னேற்றத்தைக் காணமுடிகின்றது என்பதை விரிவாக இந்நூல் தருகின்றது.

ஹெம்மாத்தகம பிரதேச பள்ளிவாசல் சம்மேளனம் இந்த நூல் வெளியிட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *