ஹெம்மாத்தகம எம்.ஐ.எம்.அமீன் அவர்களின் நூல்வெளியீடும், கௌரவிப்பும்

ஹெம்மாத்தகம பன்நூலாசிரியரும், கல்வியலாளருமான எம்.ஐ.எம்.அமீன் அவர்களின் இரு நூல்களின் வெளியீடும், அவருக்கான கௌரவிப்பும்

கிழக்கிலங்கை முஸ்லீம் கல்விச் சமூகத்தின் ஏற்பாட்டில் ஹெம்மாத்தகமயைச் சேர்ந்த பன்நூலாசிரியரும், கல்வியலாளருமான எம்.ஐ.எம்.அமீன் அவர்களைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வும்,அவர் எழுதிய சிவப்புக் கோடு மற்றும் முஸ்லிம் ஸ்பெயின் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடும் அண்மையில் (13-12-2014) சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்சேய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அட்டாளைச் சேனை கல்விக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்சேய்க் எப்.எம்.அஹமதுல் அன்சார் மௌலானா எம்.ஏ வரவேற்புரை நிகழ்த்தினார்.

அம்பாரை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்சேய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி எம்.ஏ, தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் அரபு மொழி பீட பீடாதிபதி அஷ்சேய்க் எஸ்.எம்.எம்.மஸாஹிர்,அம்பாரை மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் அஷ்சேய்க் எம்.ஐ.எம்.அமீர் எம்.ஏ. ஆகியோர் ஆசியுரையாற்றினார்கள் மேலும் நூல் விமர்சன உரையும், கௌரவிப்பு உரையையும,; பேராசிரியர்களான ஏம்.ஏ.நுஃமான், எம்.எஸ்.எம்.அனஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸீல் ஆகியோரும் நிகழ்த்தினார்கள்.

கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவரையாளர் அஷ்சேய்க் எம்.எச்.எம்.ஜெலீல் அறபு மொழியில் வாழ்த்துப் பாவையும்,ஆசிரியர் எம்.எம்.அஸ்லம் சஜா தமிழ் மொழியில் வாழ்த்துப் பாவையும் வாசித்துக் கையளித்தார்கள்.
கிழக்கிலங்கை முஸ்லீம் கல்விச் சமூகத்தின் சார்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்சேய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன், அம்பாரை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் சார்பாக அதன் தலைவர் அஷ்சேய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி எம்.ஏ, ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

பிரதேச செயலாளர் ஏ.எல.;எம்.சலீம். ஒய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ.சத்தார்,அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்சேய்க் ஏ.ஜஃபர் ஹூசைன் ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். அம்பாரை மாவட்ட அனைத்தப் பள்ளி வாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி எஸ்.எம்.ஏ.அஸீஸ் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார.;; பன்நூலாசிரியரும் கல்வியலாளருமான எம்.ஐ.எம்.அமீன் ஏற்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நூல் விமர்சன உரையும், கௌரவிப்பு உரையையும,; நிகழ்த்தி பேராசிரியர்களான ஏம்.ஏ.நுஃமான், எம்.எஸ்.எம்.அனஸ், ஆகியோருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸீல், அம்பாரை மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் அஷ்சேய்க் எம்.ஐ.எம்.அமீர் எம்.ஏ. ஆகியோர் விஷேட நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்சேய்க் ஏ.ஜஃபர் ஹூசைன் நன்றியுரை வழங்கினார். புpறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள்.

-பி.எம்.எம்.ஏ.காதர்-

1-PMMA-CADER-13-12-2014 7-PMMA-CADER-13-12-2014 13-PMMA-CADER-13-12-2014

 

2-PMMA CADER-13-12-2014

5-PMMA CADER-13-12-2014

7-PMMA CADER-13-12-2014

12-PMMA CADER-13-12-2014

13-PMMA CADER-13-12-2014

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *