ஹெம்மாத்துகம அல் அஸ்ஹர் கல்லூரியின் புதிய அதிபராக கே.எம் பௌமி நியமனம்

 

இன்று கே.எம் பௌமி அவர்கள் ஹெம்மாத்துகம அல் அஸ்ஹர் கல்லூரியின் அதிபராக கடமையேற்றார்.

அல் அஸ்ஹர் கல்லூரி முன்னால் அதிபர் நிஸ்தார் அவர்கள் கடந்த ஆண்டு தனது மேற்படிப்பிற்காக சென்றதினால் எமது கல்லூரியின் அதிபர் பதவி வெற்றிடமானது.

கிட்டத்தட்ட 6 மாதங்களாக ஹெம்மாத்துகம அல் அஸ்ஹர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், ஹெம்மாத்துகம பள்ளிவாயல்கள் சம்மேளனம், சிவில் அமைப்புக்கள் மற்றும் பிரதேச அரசியல் வாதிகளின் முயற்சியால் இன்று எமது பாடசாலைக்கு புதிய அதிபர் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

கே.எம் பௌமி  அவர்கள் மாவனல்லை சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் மற்றும்   பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

– Hemmathagama News-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares