ஹெரமினியா பள்ளிவாசள் சம்பவம் உண்மையில் நடந்தது என்ன? (முழு விபரம்)

மாவனல்லை, ஹெம்மாத்தகம வீதியிலுள்ள ஹெரமினியா தாருல் ஹிக்மா பள்ளிவாசலினை மூடுமாறு பொதுபலசேனா உத்தரவிட்டுள்ளனர்.

download (45)

பொதுபலசேனாவின் மாவனல்ல பிரதேச அமைப்பாளராக அல்பிட்டிய விகாரையின் பிரதான விகாராதிபதி மெதிரிகிரிய புன்கசர தேரர் தலைமையிலான குழுவினர் இன்று மாலை ஆறு மணியளவில் குறித்த பள்ளிவாசலுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போதே இந்த பள்ளிவாசலினை மூடுமாறு அவர்கள் உத்தரவிட்டதாக பள்ளிவாசலின் நிர்வாக சபையினர் தெரிவித்தனர். இந்த பள்ளிவாசல் சட்டவிரோதமானது என தெரிவித்து மெதிரிகிரிய புன்கசர தேரர் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

download (46)

எனினும் குறித்த பள்ளிவாசல் சட்ட ரீதியானது என்பதற்கான ஆதாரங்களை பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையிலேயே குறித்த தேரர் தலைமையிலான குழுவினர் இன்று பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து மூடுமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து மானவல்லை பொலிஸ் நிலையத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பள்ளிவாசல் வக்பு சபையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான பல பொய்யான தகவல்களை சில செய்தி இணையங்கள் பரப்பிவருவதகவும், முதலில் செய்திகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் பிழையான செய்திகளை பொது மக்களுக்கு வழங்கி அவர்களை குலப்ப முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் பொது மக்களை கேட்டுகொள்கிறோம்.

1798677_712060245520417_6818199529587570267_n-2

10003972_1494657317431281_6615724289832304705_n

10007257_1494655317431481_4063979360787590117_n

10418218_1494654850764861_2864129965644801423_n

10420070_1494653160765030_2106111587527070747_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *