மாவனல்லையில் கடும் மழை, மாவனல்லை ஹெம்மாதுகமை போக்குவருத்தும் ஸ்தம்பிதம்

New Picture

இன்று அதிகாலை முதல் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவனல்லை நகரில் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மஹ ஓயா ஆறு பெருக்கெடுக்க கூடிய அபாயமும் காணப்படுவதாகவும் மஹ ஓயா ஆறுகளுக்கு அருகில் உள்ள சில கிராமங்கள் நீரில் கூடிய அபாயமும் காணப்படுகின்றது.

இதேவேளை இன்று அதிகாலை முதல் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக “வாகொல்ல” பாலம் முற்றாக முழ்கியமையால் மாவனல்லை ஹெம்மாதுகமைக்கு இடையிலான போக்குவருதும் பாதிப்படைந்துள்ளது.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை உட்பட 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முற்பகல் 11.40 தொடக்கம் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares