மாவனெல்லை ஜாமிஆ ஆயிஷா ஸித்தீக்காவின் பட்டமளிப்பு விழா

மாவனெல்லை ஜாமிஆ ஆயிஷா ஸித்தீக்கா பெண்கள் கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நேற்று (16) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் பெண்கள் பாதுகாப்பு,பெண்கள் உரிமைகளுக்காக வன்முறையில்லா போராட்டங்களினூடாக சமாதானத்துக்கு பங்களிப்புச் செய்து 2011ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற யெமன் நாட்டுப் பெண்மணி தவக்குல் அப்துல் சலாம் காலித் கர்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும் நாளை 18அம் திகதி ஜாமிஆ ஆயிஷா ஸித்தீக்கா பெண்கள் கலாபீடத்திலும் விரிவுரைகளை நடாத்தவுள்ளார்.

10356766_10156667963185300_1747646516240149305_n

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்,உடகவியலாளர் மற்றும் அல் இஸ்லாஹ் அரசியல் செயட்பாட்டாளரான இவர் யெமன் தாயிஸ் பிரதேசத்தில் 1979 பெப்ரவரி 7ஆம் திகதி பிறந்தவர்.

இவர் யெமன் நாட்டின் முதலாவது பிரஜையாகவும்,முதல் அறபுப் பெண்மணியாகவும்,இரண்டாவது முஸ்லிம் பெண்மணியாகவும்,உலகிலே மிகக்குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவராகவும் 2011ஆம் ஆண்டு தனது 32ஆவது வயதில் தனது பெண்கள் பாதுகாப்பு,பெண்கள் உரிமைகளுக்காக வன்முறையில்லா போராட்டங்களினூடாக சமாதானத்துக்கு பங்களிப்புச் செய்தமைக்காக நோபல் பரிசு பெற்றார்.

மேலும் இரும்புப் பெண்மணி,புரட்சியின் தாய் என்ற சிறப்புப் பெயர்களை கொண்ட இவர் பலமுறை மனித நல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக யெமன் அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்ட்டவர் கை விலங்கில்லா பெண்கள் ஊடகவியலாளர் என்ற அமைப்பை உருவாக்கி தனது எழுத்தாற்றல் மூலம் யெமன் நாட்டில் மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக துருக்கி அரசு இவருக்கு துருக்கிய பிரஜாவுரிமை வழங்கியது இவர் தொடர்ந்தும் துருக்கியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

7350_10156667968185300_1990996489668124228_n 1001032_10156667967020300_6413509923074943542_n 1173591_10156667965920300_8558377829691097329_n 1460983_1099835390109164_4721723309842076910_n 10341405_10156667970530300_4874754344644713654_n 10345753_10156667972995300_3533868080973659432_n 12871455_1099835353442501_6109607763150825039_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *