2015ம் ஆண்டு மாவனல்லையில் நடைபெற்ற விசேட நிகழ்வுகளின் தொகுப்பு

New Picture (1)

2015ம் ஆண்டு மாவனல்லையில் நடைபெற்ற சில விசேட நிகழ்வுகளின் தொகுப்பு கீழ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ் இணைக்கப்பட்டுள்ள விசேட நிகழ்வுகள் மாவனல்லை நியூஸ் செய்தித்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்திகள் மாத்திரமே என்பது குறுப்பிடத்தக்கது.

 

ஜனவரி 3 – மஹ ஓயா பெருக்கெடுத்ததால் மாவனல்லையில் சில கிராமங்கள் வௌ்ளத்தில் மூழ்கியது.

ஜனவரி 3ம் திகதி இரவு முதல் தொடர்ந்தும் பெய்த கடும் மழை காரணமாக ஹிங்குலோய ஆறு மற்றும் மஹ ஓயா ஆறு என்பன பெருக்கெடுத்தது.

இதன் காரணமாக ஹிங்குலோய ஆறு மற்றும் மஹ ஓயா ஆறுகளுக்கு அருகில் உள்ள சில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றன.

10847887_751536544928806_2309175693279576479_n-1419568864491

ஜனவரி 10 – பனிரெண்டு (12) வருடங்களின் பின்னர் மாவனல்லை நகரம் பச்சையாகின்றது

மாவனல்லை நகரில் இன்று ஜனாதிபதி மைத்ரிபலா சிறிசேனவின் வெற்றியை தொடர்ந்து மாவனல்லை மக்கள் வெடி கொளுத்தியதுடன் பாற்சோறு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

12 வருடங்களின் பின்னர் மாவனல்லை நகர மத்தியில் அமைந்துள்ள முன்னால் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் உருவச்சிலைக்கு லர்மாலை அணிவிக்கப்பட்டமை குறுப்பிடத்தக்கது.

10906463_10205222914028758_1677372057855825450_n-1420883391803

ஜனவரி 11 – அதாவுட செனவிரட்ன உட்பட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மைத்திரிக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இதற்கமைய கேகாலை மாவட்ட பாராளுமன்ற இருப்பினர் அதாவுட செனவிரட்ன உட்பட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் முன்வந்துள்ளனர்.

10930934_821627474550078_1479775739819522010_n-1420981322809

ஜனவரி 12 – வீதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு அமைச்சராக கபீர் ஹாசிம் சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் வீதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வு ஜனவரி 11ம் திகதி ஜனாதிபதி செயளகத்தில் நடைபெற்றது.

10922485_319233158277576_5406504392898863667_n-1421077094684

ஜனவரி 12 – முன்னால் சுகாதார பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு

கேகாலை மாவட்ட முன்னால் சுகாதார பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாசஸ்தலத்தில் வைத்தே முன்னால் சுகாதார பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

ஜனவரி 15 – சப்ரகமுவ மாகான முதலமைச்சரும் குடும்ப சகிதம் நாட்டை விட்டு வெளியேறினர்.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தனது குடும்பம் சகிதம் ஜனவரி 15ம் காலை நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

இவரது குடும்பத்திலுள்ள 6 பேர் இவ்வாறு சென்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்தும் தந்தையுடன் சென்றுள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.225 எனும் இலக்கத்தையுடைய விமானத்தில் டுபாய் நோக்கிப் பயணமாகியுள்ளதாகவும் விமான நிலைய தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனவரி 21 – மாவனல்லை பஸ் விபத்தில் 13 பேர் காயம்

மாவனல்லை அரனாயக்க வீதியில் லொல்லேகொட பகுதியில் பாடசாலை பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகி 8 மாணவர்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அரநாயக்கவில் இருந்து பின்னவல நோக்கிச் சென்ற பாடசாலை பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வீடொன்றில் முன்பத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

accident-www.nethfm.com-011-1421837004379

ஜனவரி 23 – பதுரியா மத்திய கல்லூரியின் மூன்று மாடிக்கட்டத்தின் திறப்பு விழா

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் ரூபா 2 கோடி 30 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 15 வகுப்பறைகளுடன் கூடிய மூன்று மாடிக்கட்டத்தின் திறப்பு விழா ஜனவரி 25ம் திகதி காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

கல்லூரி அதிபர் எம்.ரி.எம். நிஸ்தார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மாவனல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் என்.ஜி. தர்மதாசவூம் சிறப்பு அதிதியாக அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்களும் கலந்து கொண்டனர்.

10952097_784629721615309_1168537488_n-1422205110333

பெப்ரவரி 1 – மாவனல்லையில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க

ஜனாதிபதி தேர்தலில் மாவனல்லை மக்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க பெப்ரவரி 1ம் திகதி பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்கள் மாவனல்லையில் நகரிற்கு வருகைதந்தார்.

10384281_599628956803281_9143881429527235364_n-1423106569743

பெப்ரவரி 17 – தெவனகல ஆய்வு அறிக்கை வெளியீடு

மாவனல்லை மக்கள் நட்புறவு மன்றம் (MPFF) தெவனகல பிரச்சினை தொடர்பான ஆய்வு அறிக்கை பெப்ரவரி 17ம் திகதி வெளியிடப்பட்டது

10957538_798350203576594_1503845641_n-1424495009201

மார்ச் 27 – நூராணியா பாடசாலை மூன்று மாடிக் கட்டிடடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

உயன்வத்தை நூராணியா மு.ம.வி இன் உத்தேசிககப்பட்டுள்ள புதிய மூன்று மாடிக் கட்டடத்திரற்கான அடிக்கல் நாட்டு விழா 27ம் திகதி காலை 9.00 மணிக்கு பாடசாலை வளாகதிதில் நடை பெறது.

new-building-1427254161348 (1)

ஏப்ரல் 27 – மாவனல்லை, ரம்புக்கனை வீதியை புணரமைத்து தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்

மாவனல்லை – ரம்புக்கனை பிரதான வீதியை புணரமைத்துத் தருமாறு கோரி மூவீன மக்களும் இணைந்து பாரிய எதிர்ப்பார்பாட்டம்;; ஒன்றை ஏப்ரல் 27ம் திகதி முன்னெடுத்திருந்தனர்.

unnamed-1-1430300941643

மே 15 – ஹெம்மாதகமை வீதி 03 ஆவது முறையாகவும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மாவனல்லையில் இருந்து ஹெம்மாத்தகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பாதை விஸ்தரிப்பு மற்றும் புனரமைப்பு வேலைகள் மே 15 ம் திகதி வெள்ளிக்கிழமை கௌரவ உயர்கல்வி பெருந்தெருக்கள் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாஷீம் அவர்கள் தலைமையில் ஹெம்மாத்துகம நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

Road1-1431761535650

ஜூன் 17 – மாவனல்லை கடையில் தீ விபத்து

ஜூன் 17ம் திகதி மாவனல்லை தபால் நிலையத்துக்கு முன் உள்ள மேத்தை விற்பனை செய்யும் கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமாகியது.

11416131_864583870275067_8315409884027009216_n-1434553993142

ஜூலை 8 – மரண தண்டனை வழங்கப்படிருந்த கே. பி. பியதிஸ்ஸ இன்று விடுதலை

10 வருடங்களுக்கு முன்னர் மாவனல்லை பெலிமுல்ல பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கேகாலை மேல் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தரவினால் மரண தண்டனை வழங்கப்படிருந்த மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் கே. பி. பியதிஸ்ஸவை ஜூலை 8ம் திகதி மேன் முறையிட்டு நீதிமன்றம் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டது.

ஜூலை 8 – ஹெம்மாதகமையில் கபீர்க்கு எதிராக அதாவுத ஆர்ப்பாட்டம்

ஜூலை 8ம் திகதி ஹெம்மாதகமை நகரில் முன்னால் அமைச்சர் அதாவுத சேனாரத்ன அவர்களின் தலைமையில் மாவனல்லை – ஹெம்மாதகமை பாதையின் அகலத்தை குறைத்து நிர்மாணிப்பதாக கூறிஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்ட்டது .

11705372_888285441243107_5052660785897338044_n-1436367641354

ஆகஸ்ட் 2 – தாகிர் ஹாஜியார் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டார்

முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சப்ரகமுவ மாகாண உறுப்பினர் தாகிர் ஹாஜியார் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து ஆகஸ்ட் 2ம் திகதி ஞாயற்றுக்கிழமை மாவனல்லையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திலேயே முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சப்ரகமுவ மாகாண உறுப்பினர் தாகிர் ஹாஜியார் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

11223716_371329336401291_6098065124222598147_o-1438775952248

ஆகஸ்ட் 18 – மாவனல்லையில் ஐ.தே.க. அமோக வெற்றி

ஆகஸ்ட் 18ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றது.

கேகாலை மாவட்டம் – மாவனல்லை தேர்தல் தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி : 37910
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு : 22446
மக்கள் விடுதலை முன்னணி : 2282
பொது ஜன பெரமுன : 623
ஜனநாயகக் கட்சி : 98

ஆகஸ்ட் 18 – லலித் திசாநாயக்க, அத்தாவுட செனவிரதன் தோல்வி

கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களான லலித் திசாநாயக்க மற்றும் சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனவிரதன் ஆகியோர் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தன்ர்.

செப்டம்பர் 6 – ஹெம்மாதகமவில் SLTJயின் நிகழ்ச்சிக்கு BBS இடையுறு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் செப்டம்பர் 06ம் திகதி ஹெம்மாதகம நகரில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 24 – மாவனல்லையில் நடைபெற்ற நபி வழியிலான பெருநாள் தொழுகை

முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா பெருநாளை மாவனல்லை சாஹிரா தேசிய கல்லலூரி மைதனத்தில் நபி வழியிலான தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆண் பெண் அடங்கலாக பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பெருநாள் தொழுகையில் இயக்க வேறுபாடுகளை மறந்து அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறுப்பிடத்தக்கது.

12002354_701357079964903_731458010136015451_o-1443077023921

அக்டோபர் 7 – புலமைப் பரீட்சை பெறுபேருகளின் படி மாவனல்லை மாணவி முதலிடம்

இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேருகளின் படி முதலாம் இடத்தை மாவனெவ்லை உஷாபிடிய ஶ்ரீ சுமங்கல ஆரம்ப பாடசாலை மாணவி மெலனி விஜேசிங்க பெற்றுக் கொண்டுள்ளார்.

அவர் பெற்ற புள்ளிகள் 196.

அக்டோபர் 20 – பல சுவாரசியமான மாற்றங்களுடன், புதுப்பொலிவு பெறுகிறது மாவனல்லை நியூஸ்

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடைய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.

2013 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் டுவிட்டர் வலைப்பின்னல் மூலமாக மாவனல்லை மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் நாம் எம் சேவையை தொடரும் ஒரு முயற்சியாக மாவனல்லை நியூஸ் இணையத்தளத்தினுடாகவும் செய்திகளை வழங்க ஆரம்பித்தோம். அல்ஹம்துலில்லாஹ்…..

மாவனல்லை குறித்த செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் அதனுடன் இணைந்த விவகாரங்களையும் உலகிற்கு எடுத்தியம்பவும் வளர்ந்து வரும் ஊடகத்துறை சார் இளம் சமுதாயத்தினரின் திறமைகளை வெளிபடுத்த ஒரு தளமாகவும் செயற்படுவதே எமது நோக்கமாகும்.

சமூக நலனை முற்படுத்தி உள்ளூர் அரசியல் மற்றும் இயக்க செயற்பாடுகளுள் சிக்காது நடுநிலையாகவும் தெளிவாகவும் செய்திகளை வழங்குவது எமது கடமையாகும்.

சமூக நலனை மட்டுமே முதன்மைப்படுத்தி நாம் செயற்படும்போது ஏற்படும் சுமைகளை சுமக்கவும், சத்தியத்தின் வழிநின்று, உண்மையாகவும், நேர்மையாகவும், துணிவாகவும் செயற்படுவதுடன், எந்தவித சலசலப்போ, அல்லது அச்சுறுத்தல்களோ எமது பயணத்தை கட்டிப்போடாது என்பதையும் எமது உறவுகளுக்கு கூறிக்கொள விரும்புகின்றோம் .

அந்தவகையில் பல சுவாரசியமான மாற்றங்களுடன், வாசகர்களுக்கு மிக இலகுவாக எமது செய்திகளை www.mawanellanews.com என்ற இணையதளத்தில் பார்வையிடமுடயும் என்பதை வாசகர்களுக்கு மகிழ்சியுடன் அறியத்தறுகின்றோம். மேலும் உங்கள் கைத்தொலைபேசிகள் முலம் மிக இலகுவாக பார்வையிடமுடயும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.மேலும் மாவனல்லை தொடர்பான செய்திகளை விரைவாக அறிந்துகொள்ள எமது முக பக்கத்தை (facebook) லைக் செய்யவும். www.facebook.com/NewsMaw

இன்ஷா அல்லாஹ்எம்மால் முயன்ற சமூக சேவைகளை நேர்மையாக முன்னெடுப்போம். தேவையான நேரங்களில் வழிகாட்டுதல்களையும் வழங்கும்.மேன்மேலும் எமது இந்த முயற்சிக்கு தங்களது ஆதரவினை துஆவையும் நாம் உங்களிடமிருந்து எதிர்பார்கின்றோம். யா அல்லாஹ் எமது நேர்மையான நோக்கத்தை ஏற்றுக்கொள்வாயாக.

அக்டோபர் 30 – கிரிங்கதெனியவை சேர்ந்த கட்டார் வாழ் சகோதரர்களின் ஒன்றுகூடல்

மாவனல்லை கிரிங்கதெனியவை சேர்ந்த கட்டார் வாழ் சகோதரர்களின் ஒன்றுகூடல் 30/10/2015 மாலை வல்ல இறைவனின் அருளால் சிறப்புற இடம்பெற்றது.

IMG_6855

நவம்பர் 1 – வேலுகுமார் அவர்கள் மாவனல்லை முருகன் கோவிலுக்கு விஜயம்

ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்கள் நவம்பர் 1ம் திகதி மாவனல்லை முருகன் கோவிலுக்கு விஜயம் செய்த போது ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

12185585_1003467819704573_2723166011998957474_o

நவம்பர் 2 – மயூரபாத கல்லூரி பழைய மாணவர் சங்க முஸ்லிம் அமைப்பின் ஒன்று கூடல்

மாவனல்லை மயூரபாத கல்லூரியில் கல்விகற்ற முஸ்லிம் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு நவம்பர் 2ம் திகதி ராழியா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

12190132_470454466469769_2184575393318135710_n

நவம்பர் 3 – விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர மாவனல்லையில்

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர இன்று மாவனல்லைக்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அமைச்சர் இதன்போது மாவனல்லையில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருந்தார்.

நவீன மயமாக்கப்பட்டு வரும் மயூரபாத கல்லூரி விளையாட்டு மைதானத்தினை அமைச்சர் பார்வையூற்றார்.

19988_416648971858183_4093776362431636570_n

நவம்பர் 13 – உலக குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொள்ளும் மாவனல்லை சாபீர்

சவூதி அரேபியா நாட்டில் மக்கா நகரில் நடைபெருகின்ற உலக முப்பது ஜுஸ்உ மனனப் போட்டியில் கலந்து கொள்ள மாவனல்லை வளவ்த்தை வசிக்கும் எம்.எம் சாபீர் என்ற மாணவன் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார்.

ed

நவம்பர் 14 – மயூரபாத கல்லூரி பழைய மாணவர் சங்கத்தி வாகனப் பேரணி

மாவனல்லை மயூரபாத கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட வாகனப் பேரணி நவம்பர் 14ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் போது மயூரபாத கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் கல்லூரிக்கு முச்சக்கரவண்டி ஒன்று அன்பழிப்பு செய்யப்பட்டது.

12243407_970695859640868_6305207323499759417_n

டிசம்பர் 2 – மாவனல்லை மஸ்ஜித் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பரிசில் வழங்கும் நிகழ்வு

மாவனல்லை மஸ்ஜித் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற உஸ்ஸாபிடிய சுமங்கல கனிஷ்ட வித்தியாலயத்தின் செல்வி. லக்ஷானி விஜயசிங்க மற்றும் சித்தி பெற்ற 20 மாணவர்கள் பரிசில்களும், சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

b83a817a-c0aa-4eb4-93a8-b22641ebe050
டிசம்பர் 4 – பதுரியா கல்லூரி மைதானம் பொது மக்களிடம் கையளிப்பு

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின், புனர் நிர்மாணம் செய்யப்பட்ட விளையாட்டு மைதானம் வெள்ளிக்கிழமை (04) பொது மக்களிடத்தில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் முன்னால் மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கப்பார் மற்றும் கல்லூரி அதிபர் எம்.ரீ.எம். நிஸ்தார், கல்லூரி பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

12239464_10153411646244440_1324547227203615393_n

டிசம்பர் 13 – றிஸ்வி முப்தி கலந்துகொள்ளும் மாபெரும் இஜிதிமா இன்று மாவனல்லையில்

மாபெரும் இஜிதிமா டிசம்பர் 13ம் திகதி மாலை 4 மணி முதல் மாவனல்லை கிருங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவை அகில இலங்கை ஜமி இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி அவர்கள் நடத்தவுள்ளார்.

டிசம்பர் 16 – மாவனல்லை சேர்ந்த எம்.சி.எம்.ஜிப்ரி பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம் ஜிப்ரி பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மாவனல்லை திப்பிட்டிய (அரனாயக்க), மாவத்தகொடையைச் சேர்ந்தவர். எம்.சி.எம் ஜிப்ரி அவர்கள் மாவனல்லை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் ஆவர்.

jaffna_police_dg_001

டிசம்பர் 16 – முச்சக்கர வண்டி விபத்தில் 17 வயது மாவனல்லை வாலிபன் வாபத்

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறம்பொடை, கல்லுக்குழி பகுதியில் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மாவனல்லையை சேர்ந்த மொஹொமட் நிஸ்ராஸ் என்ற 17 வாலிபனே விபத்தில் உயிரிழந்துள்ளார்., மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 18 – மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு (OIC) உடனடி இடமாற்றம்

மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எஸ். பிரதீப் குமார, பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எம்.டீ.டீ. திலங்க மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 29 – மாவ­னல்­லையில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள்: ஞான­சார தேரரின் கண்டுபிடிப்பு

இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் காத்­தான்­கு­டியில், அக்­கு­ற­ணையில், மாவ­னல்­லையில் இருப்­ப­தா­கவே தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஆனால் இப்­போது இவர்கள் கொலன்­னா­வை­யிலும் தெஹி­வ­ளை­யிலும் இருக்­கி­றார்கள் என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *