2016 ஹஜ் செல்வதற்கு ஏற்­க­னவே விண்­ணப்பித்தவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்

2016 ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்­கொள்­வ­தற்­காக இது­வரை 600 விண்­ணப்­பங்­களே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பி­ வைக்­கப்­பட்­டுள்­ளன.

இது கடந்த வரு­டங்­களை விடவும் மிகவும் குறைந்த எண்­ணிக்­கை­யாகும்.

2016 ஆம் ஆண்டு ஹஜ் கட­மையை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டி­ருப்­ப­வர்­க­ளி­ட­மி­ருந்து முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் விண்­ணப்­பங்­களைக் கோரி­யி­ருந்­தது.

ஹஜ் பய­ணத்­துக்­காக ஏற்­க­னவே அனுப்­பப்­பட்­டி­ருந்த விண்­ணப்­பங்கள் இம்­முறை பர­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­மாட்­டா­தெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஏற்­க­னவே விண்­ணப்­பத்­த­வர்கள் மீண்டும் விண்­ணப்­பிக்கும் படி கோரப்­பட்­டி­ருந்­தனர். என்­றாலும் இது­வரை புதி­தாக 600 விண்­ணப்­பங்­களே அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் எம்.எச்.எம்.ஸமீ­லிடம் கருத்து தெரிவிக்கையில்:

2016ஆம் ஆண்டு ஹஜ் கட­மைக்­காக புதி­தாக விண்­ணப்­பிக்­கப்­பட்ட விண்­ணப்­பங்­க­ளி­லி­ருந்தே தெரி­வுகள் மேற்­கொள்­ளப்­படும். பழைய விண்­ணப்­பங்கள் பரி­சீ­ல­னைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.

புதிய  விண்­ணப்­பங்கள் கிடைக்கும் திக­திக்­கேற்ப வரிசைக் கிரா­ம­மாக இலக்­க­மி­டப்­படும்.

நேர்­முகப் பரீட்­சை­யொன்றின் பின்பே ஹஜ் கட­மைக்கு தெரி­வுகள் நடை­பெறும். முதன்­மு­றை­யாக ஹஜ் கட­மையை மேற்­கொள்­ப­வர்­க­ளுக்கே முத­லிடம் வழங்­கப்­படும்.

இறுதி நேர சிரமங்களைத் தவிர்த்து கொள்வதற்காக ஹஜ் கடமை மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளவர் தமது விண்ணப்பங்களை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *