5 குழந்­தை­க­ளையும் இழந்து தவிக்கும் தாய்

”அல்லாஹ் எனக்குத் தந்த குழந்­தை­களைத் திருப்பிப் பெற்றுக் கொண்டான்…. ஏன் எனக்கு இந்தச் சோதனை?” என்று மன முருகி அந்தத் தாய் கண்ணீர் சிந்­து­வது உற­வி­னர்­க­ளுக்கும், பிர­தேச மக்­க­ளுக்கும் பெரும் வேத­னை­யாக அமைந்து விட்­டது.

அந்­தத்தாய் நமக்கு நன்கு அறி­மு­க­மா­ன­வர்­தான்.கண்டி மாவட்டம் பாத்­த­தும்­பறை தேர்தல் தொகு­தி, மடவளை பஸார் நாபானவைச் சேர்ந்த பாத்­திமா பர்­ஜீ­சிஹா (வயது 31) ஆவார். கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி அவர் ஒரே சூலில் 5 குழந்­தை­களைப் பிர­ச­வித்தார்.

பிர­ச­வத்தின் பின்பு கண்டி பெரிய வைத்­தி­ய­சா­லையில் 5ஆம் இலக்க வார்ட்டில் அனு­ம­திக்­கப்­பட்டார். சிசே­ரியன் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் குழந்­தைகள் பிர­ச­வ­மா­கி­யதால் சில மணித்­தி­யா­ல­யங்கள் அவர் மயக்­க­முற்று இருந்தார்.

அவர் மயக்கம் தெளிந்து கண் விழித்த போது ஐந்து குழந்தைச் செல்­வங்கள் கிடைத்­துள்­ளமை தெரி­ய­வந்­தது. அன்று வைத்­தி­ய­சா­லையில் தன்னைப் பார்ப்­ப­தற்கு சூழ்ந்­தி­ருந்த உற­வி­னர்­க­ளிடம் அவர் கண்ணீர் விட்­ட­ழுதார். அது ஆனந்தக் கண்ணீர். உணர்ச்சி மேலீட்­டினால் வழிந்த கண்ணீர். அன்று பாத்­திமா பர்­ஜீ­சிஹா உற­வி­னர்­க­ளிடம் இவ்­வாறு கூறினார்.

”எனக்கு ஐந்து குழந்­தைகள் கிடைத்­துள்­ளமை பெரிதும் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது. இந்தக் குழந்­தை­களை எனக்கு வழங்­கிய அல்­லாஹ்­வுக்கு நான் நன்றி செலுத்­து­கிறேன்” என்றார்.

ஆனால் கடந்த ஜூன் 27ஆம் திகதி பிறந்த குழந்­தைகள் இப்­போது ஒன்றன் பின் ஒன்­றாக மர­ணித்­து­விட்ட மன­வே­த­னையில் தாய் பர்­ஜீ­சிஹா தினமும் கண்ணீர் சிந்­து­கிறார். கடந்த 15ஆம் திகதி அவ­ரது ஐந்­தா­வது குழந்தை மர­ணித்து விட்­டது.

முத­லா­வது குழந்தை ஜூலை மாதம் முதலாம் திகதி இறந்­தது. அத­னை­ய­டுத்து ஜூலை 9ஆம் திக­தியும் 22ஆம் திக­தியும் இம்­மாதம் 8ஆம் திக­தியும் என நான்கு குழந்­தைகள் இறந்­தன. கடை­சி­யாக எஞ்­சி­யி­ருந்த குழந்தை கடந்த 15 ஆம் திகதி இறந்த போது மரணச் செய்தி உட­ன­டி­யாக டாக்­டர்­க­ளாலும் உற­வி­னர்­க­ளாலும் தாயா­ருக்குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. தொடர்ந்து 4 குழந்­தை­களும் குறு­கிய காலத்­துக்குள் இறந்து விட்­டதால் அவ­ரது மன­நிலை மிகவும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. கடைசி குழந்தை இறந்த செய்தி ஒரு வார ­கா­லத்தின் பின்பே அவ­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.

குழந்­தை­களின் தந்தை மொஹமட் ரினாஸ் (வயது 36) பிர­சவம் நிகழ்ந்த போது குவைத்தில் தொழில் புரிந்து வந்தார். அவ­ருக்கு செய்தி அறி­விக்­கப்­பட்­டதும் இலங்கை திரும்­பினார். இலங்கை திரும்­பிய அவர் தனது மனை­விக்கு ஆறு­த­லாக மனை­வி­யு­டனே இருக்­கிறார்.

பர்­ஜீ­சிஹா குழந்தைப் பேறு இல்­லாத கார­ணத்­தினால் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக குழந்தைப் பேற்­றுக்­கான சிகிச்­சை­களை கண்டி வைத்­தி­ய­சா­லையில் பெற்று வந்தார். குறித்த பிர­சவம் தனது கண்­கா­ணிப்பின் கீழ் நிகழ்ந்த மூன்­றா­வது ஐந்து குழந்­தை­களின் பிர­சவம் என மகப்­பேறு விஷேட வைத்­திய நிபுணர் கபில குண­வர்­தன தெரி­வித்­தி­ருந்தார். குழந்­தை­களின் நிறை 600 – முதல் 700 கிராம்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இருந்தது.

குழந்­தை­களின் தாயார் நீரி­ழிவு நோய்க்­குட்­பட்­டி­ருந்­ததால் வைத்­தி­யர்­களின் விஷேட வைத்­திய கண்­கா­ணிப்பின் கீழ் வைக்­கப்­பட்டே சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டது. அவ­ரது கர்ப்ப காலம் பிர­சவ தினத்­தன்று 27 வாரங்­களும் 6 தினங்­க­ளு­மா­யி­ருந்­தது. அவ­ரது கர்ப்­ப­காலம் நீடிக்­கப்­பட்டால் உயி­ருக்கு (தாயார்) ஆபத்து ஏற்­படும் எனக்­க­ரு­தியே சிசே­ரியன் சத்­திர சிகிச்சை செய்­யப்­பட்­டது.

பொது­வாக சிசு பிர­சவம் கர்ப்­ப­காலம் 36வாரங்கள் பூர்த்­தி­யா­னதன் பின்பே நிகழ்­வ­துண்டு. குறித்த பிர­சவம் குறை மாதத்தில் குறை­வான நிறை­யுடன் பிறந்­ததால் வைத்­தி­ய­சா­லையின் விஷேட சிசு பரா­ம­ரிப்புப் பிரிவில் குழந்­தைகள் வைக்­கப்­பட்­டன. ஐந்து குழந்­தை­க­ளையும் பரா­ம­ரிக்க கண்டி விஷேட சிசு பரா­ம­ரிப்புப் பிரிவில் இடப்­பற்­றாக்­குறை நில­வி­யதால் இரு குழந்­தைகள் பேரா­தனை வைத்­தி­ய­சா­லையின் விசேட சிசு பரா­ம­ரிப்புப் பிரிவில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

குழந்­தைகள் சிசு விஷேட பரா­ம­ரிப்புப் பிரிவில் வைக்­கப்­பட்­டி­ருந்­ததால் தாயா­ருக்கு தனது பிள்­ளை­களை முழு­மை­யாக பார்க்கும் சந்­தர்ப்­பமும் கிட்­ட­வில்லை. இரு குழந்­தைகள் பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தாயார் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த கண்டி வைத்­தி­ய­சா­லையில் மூன்று குழந்­தை­களே வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

குழந்­தை­களின் இறப்பு ஒவ்­வொன்­றுக்குப் பின்பும் தாயா­ருக்கு அணி­விக்­கப்­பட்­டி­ருந்த குழந்­தை­களின் அடை­யாள இலக்­கங்கள் ஒவ்­வொன்­றாக அகற்­றப்­பட்­டன.
குழந்­தை­களின் தாயாரின் உற­வி­ன­ரான எம்.எம் பஸ்­லியை தொடர்பு கொண்டபோது தாயாரின் நிலைமை தொடர்­பான விப­ரங்­களைப் பெற்றுக் கொள்­ள­மு­டிந்­தது.

பஸ்லி விளக்­க­ம­ளிக்­கையில்

”குழந்­தை­களின் நினைவு வரும்­போ­தெல்லாம் அவர் மயக்­க­முற்று கீழே சாய்ந்து விடு­கிறார். சிறிய குழந்­தை­களைப் பார்த்து விட்டால் அவர் மிகவும் கவ­லையில் ஆழ்ந்து மயக்க நிலைக்­குள்­ளாகி விடு­கிறார் என்­றார்.

வைத்­தி­ய­சா­லையில் அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த டாக்­டர்கள் ஆலோ­சனை வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். ஆறு­தல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். தொடர்ந்தும் அவர் மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக வைத்­தி­ய­சா­லைக்கு செல்ல வேண்­டி­யுள்­ளது. அண்­மை­யிலே வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வீடு திரும்­பினார்.

‘குறை மாதத்தில் எனது குழந்­தைகள் பிறந்­தி­ருப்­பதால் பிள்­ளைகள் தொடர்பில் நான் பயத்­து­டனே இருக்­கிறே. அல்­லாஹ்வின் அருளால் ஐந்து பேரையும் நன்­றாக வளர்த்துக் கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்­க­வேண்டும் என பர்­ஜீ­சிஹா ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தார். என்­றாலும் அல்லாஹ் அவ­ளது எதிர்­பார்ப்­பினை நிறை­வேற்றி வைக்­க­வில்லை எனது கணவர் இந்த நேரத்தில் என்­னு­டனும் குழந்­தை­க­ளு­டனும் இருந்தால் நல்­லது என நான் நினைக்­கிறேன் என பர்­ஜீ­சிஹா பிர­ச­வத்தின் பின்பு தெரிவித்திருந்தார். அப்போது அவளது கணவர் குவைத்தில் இருந்தார். இப்போது இன்று கணவர் அவளருகில் இருந்தாலும் குழந்தைகள் அவர்களை விட்டுப்பிரிந்து சென்று விட்டமை அவர்களை மீள முடியாத வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

ஐந்து குழந்தைகளும் மடவளை மையவாடியில் ஒரே இடத்தில் அருகருகே நட்சத்திர வடிவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பஸ்லி தெரிவித்தார்.

பர்ஜீசிஹாவுக்கு ஆறுதலாக பெற்றோரும் கணவரும் உறவினர்களும் உடனிருக்கிறார்கள் என்றாலும் குழந்தைகளின் நினைவுகள் அழியாத கீறல்களாக அவருக்குள் மட்­டு­மல்ல நமக்­குள்ளும் பதிந்துவிட்டன.

ஏ.ஆர்.ஏ.பரீல் \ Courtesy: Vidivelli

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *