50 பிரிவெனாக்கள், பள்ளிவாயில்களுக்கு கணனி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் மாவனல்லையில்

முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்லும் தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (29) முற்பகல் மாவனல்லை பிரதேச சபைக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

அதிகார மோகம் படைத்த ஒருசிலர் தான் செல்லும் வழி அறியாமல் பாதையில் நடந்து சென்றபோதும் அரசாங்கம் சுயநினைவுடனும் பொறுமையுடனும் நடவடிக்கை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபடுவதாக இதன்போது ஜனாதிபதி அவர்கள்வ லியுறுத்தினார்.

கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள 50 பிரிவெனாக்கள் மற்றும் பள்ளிவாயில்களுக்கு கணனி இயந்திரங்களை வழங்கும் பொருட்டு இவ்வைபவம் இடம்பெற்றது. சர்வமதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மதத் தலைவர்களுக்கு கணனிகள் வழங்கி வைக்கும் அடையாளமாக ஜனாதிபதியினால் கணனிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர்களான கபீர் ஹசீம், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ரவுப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் சம்பிக்கா பிரேமதாச, முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

அத்துடன் கிட்டிய பாடசாலை சிறந்த பாசாலை எனும் எண்ணக்கருவினை கேகாலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி மாவனல்லை மெடேரிகம வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவத்திலும் ஜனாதிபதி இன்று (29) முற்பகல் கலந்துகொண்டார்.

பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பாடசாலைகளை சிறந்த பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் இது மேற்கொள்ளப்படுவதுடன், பிரசித்திப்பெற்ற பாடசாலைகளுக்கு நிலவும் போட்டியினை குறைப்பது இதன் நோக்கமாகும்.

1 3 4 5 8

13661779_271365986565972_4913094449871760995_o 13667971_271365759899328_8023967153872669242_o 13667971_271365783232659_465073898122345542_o 13680306_271366256565945_3525488937562695542_o 13701135_271366219899282_3014533963216744001_o 13731080_271366063232631_1695728444913842275_o 13782213_271366389899265_2965538647267570506_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *