66 ஆவது சுதந்திர தினத்தினை கேகாலையில் கொண்டாட அணைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

“ ஒற்றுமையை ஏற்படுத்துவோம் – உலகை வெல்லும் ஒரு தேசம்” எனும் கருப்பொருளுடன் சுதந்திர தேசமொன்றின் பெருமையை பறைசாற்றும் இலங்கைத் திருநாட்டின் 66 ஆம் சுதந்திர தின விழா  கேகாலை நகரத்தில் நடாத்தப்படுவதற்கு தேவையான  அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட  செயலாளர் துசித பீ. வனிகசிங்ஹ அவர்கள் குறிப்பிட்டார். அதன்படி பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சனநாயக சோஷலிஸ குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இலங்கையின் 66 ஆம் சுதந்திர தின விழா மிக விமர்சையாக கேகாலையில் நடைபெறவுள்ளது.

தேசிய சுதந்திர தின விழாவிற்கு முன்னோடியாக பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி இரவு நிதஹஸ் மந்திரவில் பௌத்தமத வழிபாடுகள் இடம்பெற்று அடுத்த தினம் அன்னதானமும் வழங்கப்படும். ஒரே கொடியின் நிழல் பெறுகின்ற இனமாக அனைத்து இனத்தினரதும் நன்மதிப்பைப் பெறுகின்ற தேசிய சுதந்திர தினத்திற்கு முன்னோடியாக பல்வேறுபட்ட மத வழிபாட்டு நிகழச்சிகள் கேகாலை மாவட்டத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகள் கேகாலை வேவலதெனிய விகாரையில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு இந்து மத நிகழ்வுகள் கேகாலை கதிரவேலாயுதம் காளி கோயிலில் நடாத்தப்படவுள்ளது. இஸ்லாமிய மத நிகழ்வுகள் கேகாலை முஹியத்தீன் ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்படவுள்ளதோடு கத்தோலிக்க மத நிகழ்வுகள் கேகாலை புனித மரியால் ஆலயத்திலும் கிறிஸ்தவ மத நிகழ்வுகள் கேகாலை மீபிடிய பெரமாது சபையிலும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன.

மதிப்பிற்குரிய இலங்கை தேசத்தின் கௌரவத்தினையும் மதிப்பினையும் பறைசாற்றும் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பௌத்த மதகுருமார் மற்றும் ஏனைய மதத்லைவரகள் பலர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். அவ்வாரே கௌரவ அமைச்சர்கள்,   வெளிநாட்டுத் தூதுவர்கள் பலர் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.  அவ்வாரே இத் திருநாட்டின் எதிர்காலத்தினை, இதன் கௌரவத்தினை பாதுகாப்பதில் பாரிய பங்களிப்பை வழங்கிய முப்டைகள்,பொலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையனியின் பிரதாணிகள், உற்பட ஏனைய அலுவலர்கள் பலர் பங்பற்றவுள்ளனர். இங்கு மிக முக்கிய நிகழ்வாக தமது தாய்நாட்டிற்காக வாழ்வின் பலதை தியாகம் செய்த அங்கவீனமுற்ற 55 இரானுவ வீரர்களும் இந்நிகழ்வில் கலந்தகொள்வது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தின விழாவினைச் சிறப்பிக்கும் நிகழ்வான முப்படைகளின் அனிவகுப்பு மரியாதையில் 1400 இரானுவப் படை வீரர்களும், 250 கடற்படை வீரர்களும், 250 விமாணப் படை வீரர்களும், 250 சிவில் பாதுகாப்புப் படையணியினரும், 325 தேசிய சிறுவர் சாரணீய அனியிரும், 300  இளைஞர் படையனியினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை அளங்கரிப்பதற்காக நடாத்தப்படுகின்ற கலாச்சாரக் கண்காட்சிகளுக்கு 16 கலாச்சார நிகழ்ச்சிகளை முன்வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.தேசத்தின் மகிமையை ஞாபகமூட்டுவதற்காக  பாடப்படுகின்ற தேசிய கீதத்தினை இசைப்பதற்காக மாவட்டப் பாடசாலைகளிலிருந்து 110 மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளன. ஜயமங்கல காதா மற்றும் பிரார்தனா காதா இசைப்பதற்காக மாவட்டத்தின 04 பாடசாலைகள் பங்கேற்கும்  வகையில் 25 மாணவரகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.​

தேசிய சுதந்திர தினத்தினை மெருகூட்டுவதற்காக பல்நிறப் பதாதைகளை கேகாலை நகரெங்கிலும் பறக்கவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுதந்திர தின விழா நடைபெறுகின்ற பெப்ரவரி 04 ஆம் திகதி மற்றும் வௌளோட்டம் நடைபெறுகின்ற தினங்களில் சமூகமளிக்கின்ற பொதுமக்களுக்காக தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மின்சாரம்,நீர் மற்றும் துப்பரவாக்கல் விடயங்கள் இவற்றில் முதன்மை பெறுகின்றன. குறித்த தினங்களில் முதலுதவி சேவைகளையும் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது வரையில் சுதந்திர தின விழா நடைபெறவிருக்கின்ற கேகாலை நிதஹஸ் மாவத்தை மற்றும் கேகாலை நகரைச் சூழ மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாகப் பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.சுதந்திர தின விழாவிற்கு முன்னோடியாக மேற்கொள்ளப்படுகின்ற நிர்மானங்கள் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் திருக்கரங்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares