ACJU மாவனல்லை கிளை மறுசீரமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை

Untitled

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவனல்லை கிளை மறுசீரமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக மாரியுள்ளது.

கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவனல்லை கிளை தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

அந்த வகையில் மாவனல்லை ஜம்இய்யத்துல் உலமா சபை சரியாக இயங்கவில்லை எனவும் மாவனல்லை ஜம்இய்யத்துல் உலமா சபையில் மாவனல்லையில் ஒரு பிரதேசத்தை மாத்திரம் மையமாக கொண்டு இயங்குவதாகாவும், இதன் போது மாவனல்லையின் அணைத்து பிரதேசங்களும்  பிரதிநிதித்துவம்  செய்யபடவில்லை எனவும் இந்த உலமா சபையில் தகுதியான உலமாக்கள் நியமிக்கப்படவில்லை எனவும் மாவனல்லை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாவனல்லை நடைபெற்ற பேரினவாத சில விசமிகளின் செயற்பாடுகளின் போது கூட மாவனல்லை ஜம்இய்யத்துல் உலமா சபை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

எனவே காலத்தின் தேவையை அறிந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவனல்லை கிளை மறுசிரமைக்கப்பட்டு நிர்வாக குழுவுக்கு தகுதியான உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என மாவனல்லை மக்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்த விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாவனல்லை மக்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares