GIT பரீட்சை நாளை 8 ஆம் திகதி

பொது தகவல் தொழில்நுட்பம் 2015 ஆம் ஆண்டுக்கான பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிறு 9.00 மணி முதல் 12.00 மணி வரை நாடு முழுவதிலுமுள்ள 1205 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்கு 156872 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். சகல பரீட்சார்த்திகளும் உரிய நேரத்துக்கு பரீட்சை நடைபெறும் மத்திய நிலையத்துக்கு வருகை தருமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பரீட்சை தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு 011-2784537, 011-2784208, 011-3188350 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares