LTTE யினால் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக, வெளியேற்றப்பட்ட 25 வது ஆண்டு நிறைவு – டி.பி.எஸ்.ஜெயராஜ்

பகுதி – 1-

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தாலMQCH் அணுகப்பட்ட விசாரணையின் அமைப்பு மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப அந்த விசாரணை நடத்தப்பட வேண்டிய காலம் 2002 பெப்ரவரி யுத்த நிறுத்தம் முதல், யுத்தம் முடிவடைந்த காலமான மே 2009 வரையாக இருந்தது, குற்றம் சாட்டியுள்ளபடி ஸ்ரீலங்காவில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது யுத்தக் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பதை உறுதி செய்யவேண்டியது அந்த விசாரணையின் நோக்கமாக இருந்தது. இந்த குறிக்கப்பட்ட காலத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்ட படியால், 2002க்கு முந்தைய ஆண்டுகளில் நடந்தேறிய ஏனைய பல மோசமான சம்பவங்கள் இயற்கையாகவே கண்காணிக்கப் படாமல் போய்விட்டன. இப்படி நடைபெற்ற பயங்கரங்களில் குறிப்பிடத் தக்கது,தமிழீழ விடுதலைப் புலிகளினால் (எல்.ரீ.ரீ.ஈ) வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஒட்டு;மொத்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவம்.

ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ் – முஸ்லிம் உறவின் வரலாற்றில் இடம்பெற்ற கொடிய  மனிதாபிமானமற்ற அத்தியாயத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு தற்போது நினைவு கூரப்பட்டு வருகிறது. அது 1990 ஒக்ரோபரில் நடைபெற்றது, புலிகள் அமைப்பு வட மாகாணத்தை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது இன அழிப்புக்குச் சமமான ஒரு அட்டூழியமான நடவடிக்கை. ஒரு சில நாட்களுக்குள்ளயே தாங்கள் பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்திருந்த தாயகத்தை விட்டு முஸ்லிம்கள் விரட்டியடிக்கப் பட்டார்கள்.

1990ல் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டது மனிதாபிமானத்தின் ஒரு பேரழிவு. மக்களை தங்கள் வாழ்விடங்களில் இருந்து துப்பாக்கி முனையில் வேரோடு பிடுங்கிய பின், அவர்களிடமிருந்த பணம் மற்றும் நகைகளை அவர்களுக்கு கிடைக்காமல் செய்த பின்பு, விரட்டியடித்தது வெறுக்கத்தக்கதும் மற்றும் மன்னிக்க முடியாத குற்றமாகும். கடந்த காலங்களில் இந்த துயரச் சம்பவம் பற்றி நான் அடிக்கடி எழுதி வந்துள்ளேன். இப்போது இந்த ஒட்டுமொத்த வெளியேற்ற நிகழ்வின் 25 வது ஆண்டு நிறைவை கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த திரளான வெளியேற்ற நினைவுகளுக்கு உயிரூடடுவதற்காக எனது முந்தைய எழுத்துக்களில் இந்த துயரமான பயங்கரம் தொடர்பாக எழுதப்பட்ட கதைகளில் சிலவற்றை இங்கு சுருக்கமாக மீண்டும் குறிப்பிடுகிறேன். தமிழ் பேசும் முஸ்லிம்கள் அவர்களது சகோதர இனத்தவரின் துப்பாக்கி மொழியினால் விரட்டியடிக்கப்பட்ட இழி செயலுக்கு வழிகோலிய சம்பவங்களையும் கூட நான் கண்டுபிடிக்க விரும்புகிறேன்.

“கறுப்பு ஒக்ரோபர் 1990”

கறுப்பு ஒக்ரோபர் 1990 யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாவகச்சேரியிலிருந்த jaffna-muslim-31முஸ்லிம்களை ஒக்ரோபர் 15ல் வெளியேற்றுவதில் ஆரம்பமாகி ஒக்ரோபர் 30ல் யாழ்ப்பாண நகரத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றியதுடன் முடிவடைந்தது. வடக்கு பெருநிலப் பரப்பிலிருந்த முஸ்லிம்களின் திரளான வெளியேற்றம், யாழ்ப்பாண நகரத்தில் ஆரம்பமாவதற்கு சில நாட்கள் முன்னதாகவே ஆரம்பித்து குடாநாட்டு முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்து முடித்த ஒரு சில நாட்களின் பின் முடிவடைந்தது. பின்னர் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த ஒட்டுமொத்த வடக்கு முஸ்லிம்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் தவிர முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப் பட்டார்கள். வவுனியாவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அதிர்ஷ்டக்காரர்களாக இருந்தார்கள் ஏனென்றால் அவர்களின் பெரும்பாலான கிராமங்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளேயே இருந்தன. வடக்கு பெருநிலப்பரப்பிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ யினால் 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். குடாநாட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களையும் சேர்த்து வட மாகாணத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 1990ல் சுமார் 75,000 ஆக இருந்தது.

வடபகுதி முஸ்லிம்கள் தங்கள் சக தமிழ் மக்களைப்போலவே அப்போது நடைபெற்ற யுத்தத்தினால் சம அளவான பாதிப்பை அடைந்திருந்தார்கள். தமிழ் குடிமக்களைப் போலவே அவர்களும் தீவிரமான  ஷெல் மற்றும் குண்டுத் தாக்கதல்கள் இடம்பெறும்போது காலத்துக்கு காலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சில நாட்களின் பின் அவர்கள் எப்போதும் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால் கிழக்கு மாகாண நிலமை ஒரு வித்தியாசமான திருப்பத்தை அடைந்திருந்தது.

தமிழ் – முஸ்லிம் பகையுணர்வு கிழக்கில் அதிகரித்துக் கொண்டிருந்தது. சில முஸ்லிம் அங்கத்தவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினை விட்டு விலகியதும் மற்றும் சிலர் எதிரிகள் பக்கம் சென்றதும் கருணா (இராணுவத் தளபதி) மற்றும் கரிகாலன் (அரசியல் பொறுப்பாளர்) ஆகியோரின் கீழியியங்கிய கிழக்கு எல்.ரீ.ரீ.ஈயினை சீற்றம் அடைய வைத்தது. எல்.ரீ.ரீ.ஈயில் இருந்த பல முஸ்லிம் அங்கத்தவர்கள் அதன் தலைமையினால் கொல்லப்பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈக்குள் ஒரு முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு பரவியிருந்தது. மறுபுறத்தில் அப்போது ஆட்சியில் இருந்த ஐதேக அரசாங்கம் இந்த உணர்வை பயன்படுத்தி எல்.ரீ.ரீ.ஈக்கு மேலும் சேதமிழைக்க ஆரம்பித்தது. அநேக முஸ்லிம் சமூக விரோத சக்திகள் உள்ளுர் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். இந்தப் பிரிவினர் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தமிழர் விரோத வன்முறைகளை ஊக்குவித்தார்கள். சில சம்பவங்களில் தமிழ் பொதுமக்களின் படுகொலைகளுக்கு இந்த முஸ்லிம் உள்ளுர் காவல் படையினரே பொறுப்பாக இருந்தார்கள். இந்த முஸ்லிம் காவல்படை தலைமையிலான கும்பல்கள்  சில தமிழ் குக்கிராமங்களையும் மற்றும் கிராமங்களையும் அழித்து நாசமாக்கின. அரச பாதுகாப்பு படையினரின் ஒரு பகுதியினரால் அவர்களுக்கு மறைவான பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக எல்.ரீ.ரீ.ஈ, முஸ்லிம் பொதுமக்களை கொடூரமான முறையில் கோரமாக படுகொலை செய்தது. சம்மாந்துறை மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த முஸ்லிம்களை கொன்றது மற்றும் ஏறாவூர் சதாம் ஹ_சைன் மாதிரிக் கிராம பொதுமக்களை படுகொலை செய்தது என்பன குறிப்பிடத்தக்க உதாரணங்கள்.

இந்த மாதிரியான சம்பவங்களின் கொடூரமான அம்சம் என்னவென்றால் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒரு பிரிவினரால் தமிழ் – முஸ்லிம் பகைமையை உருவாக்க வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி இதன் பின்னணியில் இருந்ததுதான். இதில் சுட்டிக்காட்டத்தக்க நிழலான நிகழ்வு “கப்டன் முனாஸ்” சம்பந்தப்பட்டது. இந்த கப்டன் முனாஸின் கட்டளையின் கீழிருந்த ஒரு பிரிவு 1990 ல் தமிழ்களின் பல கொலைகளுக்கும் மற்றும் காணாமற்போதலுக்கும் பொறுப்பாக இருந்தது என்று கூறப்படுகிறது. கப்டன் முனாஸ் என்கிற பெயர் மக்கள் மத்தியில் வெறுப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. அவர் ஒரு முஸ்லிம் என்றே ஊகிக்கப்பட்டது. எனினும் பின்னைய வருடங்களில் இடம்பெற்ற சோசா விசாரணை ஆணைக்குழுவினால் இந்த கப்டன் முனாஸ் என்று அழைக்கப் பட்டவர் உண்மையில் றிச்சட் டயஸ் என்கிற பெயரை உடைய ஒரு புலானாய்வு அதிகாரி என்கிற உண்மை வெளிப்படுத்தப்பட்டது.

தமிழ் – முஸ்லிம் உறவு

கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவு மிகவும் கீழ் நிலையில் இருந்த போதிலும் வடக்கிலுளkarikalan்ள நிலமை பெரிதும் வித்தியாசமாக இருந்தது. இரண்டு சமூகங்களும் சமாதானமான முறையில் கூட்டு வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் சிறியளவு சிறுபான்மையினராக இருந்தபடியால் எந்த வகையிலும் பெரும்பான்மை தமிழர்களுக்கு ஒரு அச்சுறுத்தலை உண்டாக்கவில்லை. வடக்கில் முஸ்லிம்கள் சமாதானமாக வாழ்ந்து கொண்டிருந்த அதேவேளை கிழக்கில் பதற்றம் நிலவி வருவது கிழக்குப் புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. அப்போது கிழக்கு அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த கரிகாலன் தலைமையிலான ஒரு தூதுக்குழு முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு புலிகளின் பெருந்தலைவர் பிரபாகரனை இணங்க வைப்பதற்காக வடக்கு நோக்கி வந்தது. முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கரிகாலன் விரும்பினார். இந்த அழுத்தம் புலிகளின் உயர்மட்டத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தபோதுகூட யாழ் குடாநாட்டின் தென்மராட்சி பிரிவான சாவகச்சேரியில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

1990 செப்டம்பர் 4ல் எல்.ரீ.ரீ.ஈயுடன் உதவியாளர்களாக இணைந்துள்ள தமிழர்கள் குழு ஒன்று சாவகச்சேரி பள்ளிவாசல் அருகில் இருந்த சில முஸ்லிம்களுடன் ஒரு கடுமையான வாய்ச் சணடையில் ஈடுபட்டது. சிலர் பள்ளிவாசல்மீது தாக்குதல் மேற்கொள்ளவும் முயன்றார்கள். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இதில் தொடர்பு கொண்டிருந்த தமிழர்களைப் பிடித்து அவர்களை எல்.ரீ.ரீ.ஈயிடம் ஒப்படைத்தது. புலிகள் அவர்களை விடுதலை செய்ததுடன்  பெரும்பான்மை தமிழர்களை புண்படுத்த வேண்டாம் என்று  சிறுபான்மை முஸ்லிம்களை எச்சரிக்கை செய்தது. செப்ரம்பர் 25ல் தான் குடாநாட்டை விட்டு வெளியேறுவதற்கு எல்.ரீ.ரீ.ஈ பாஸ் வழங்க மறுத்ததுக்காக எதிர்ப்பு தெரிவித்த ஒரு முஸ்லிம் இளைஞன்  புலிகள் அங்கத்தினர்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். அதன்பின் அவன் காணாமல் போய்விட்டான்.

சாவகச்சேரியில் வாழந்த முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் நகரத்தின் டச்சு வீதியிலேயே வாழந்து வந்தார்கள். அதேவேளை முஸ்லிம்கள் இடையேயான உள்ளக வன்முறை சம்பவம் ஒன்றை விசாரணை செய்த எல்.ரீ.ரீ.ஈ இறைச்சி வெட்டுபவர் வீட்டிலிருந்து சில வாள்களை கண்டுபிடித்தது. புலிகள் சொல்லும் விளக்கத்தின்படி இது அவர்களிடையே ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கச் செய்தது. எல்.ரீ.ரீ.ஈ முஸ்லிம் வீடுகளிலும் மற்றும் வியாபார நிலையங்களிலும் சோதனை நடத்தியதை தொடர்ந்து ஒரு பிரபலமான முஸ்லிம் வியாபாரியின் கடையில் 75 வாள்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததை கண்டுபிடித்தார்கள். இது ஒரு கொடிய சதியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டது. இந்த விளக்கம் உண்மையாக இருந்தாலும் கூட 75 வாட்கள் துப்பாக்கி ஏந்திய எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக எதாவது அனர்த்தத்தை ஏற்படுத்துவதை யாராலும் காணமுடியாது.

இந்த வாட்கள் கண்டெடுக்கப்பட்ட வியாபார ஸ்தலம் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்குச் சொந்தமானது அவரது லொறிகள் வர்த்தகத்துக்காக கொழும்புக்கும் மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் பயணம் செய்து வந்தன. தமது அளவுக்கு மீறிய சித்தப்பிரமைக்கும் அதீத கற்பனைகளுக்கும் பெயர்பெற்ற எல்.ரீ.ரீ.ஈ யின் புலனாய்வு பிரிவினர் இதை ஒரு பாரிய சதியாக சந்தேகிக்கத் தொடங்கினார்கள். அரச பாதுகாப்பு படையினரின் புலனாய்வு உபகரணம் அடிக்கடி கொழும்புக்கு போய்வரும் முஸ்லிம் வர்த்தகரை நாசவேலையில் ஈடுபட அல்லது உளவு பார்ப்பதற்காக பயன் படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதை முன்கூட்டியே தடுப்பதற்கான செயற்பாடு அவசியம் என்று எல்.ரீ.ரீ.ஈ உணர்ந்தது.

எனவே பிரதானமாக டச்சு வீதியில் செறிந்து வாழும் சாவகச்சேரி முஸ்லிம்கள் ஒக்ரோபர் 15, 1990ல் வெளியேற்றப்பட்டார்கள். கிட்டத்தட்ட 1000 வரையான மக்கள் துப்பாக்கி முனையில் வெளியேறும்படி கட்டாயமாக பணிக்கப்பட்டார்கள். அவர்களிடம் வட மாகாணத்தின் தெற்குப்புற நகரமான வவுனியாவுக்கு அப்பால் செல்லும்படி கூறப்பட்டது. சாவகச்சேரி முஸ்லிம்கள் ஒக்ரோபர் 18, அளவில் வவுனியாவை வந்தடைந்தார்கள். சாவகச்சேரி முஸ்லிம்களை வெளியேறும்படி கட்டளையிடப்பட்டதைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வு ஆரம்பமாகியது

(தொடரும்)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *