PJ இலங்கை வரவில்லை, பாதுகாப்பு அமைச்சு ரத்துச் செய்தது

தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. சிங்கள மொழிமூல அல்குர்ஆன் மொழிபெயர்ப்பை வெளியிட இலங்கை வரவில்லை என மாவனல்லை நியூஸ்  இணையத்திற்கு சற்றுமுன்னர் தகவல் கிடைத்தது.
அவர் வந்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என பதுகாப்பு அமைச்சுக்கு செய்யபட்ட முறைப்பாட்டுக்கு அமைய பி.ஜே.யின் இலங்கை வருகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு அமைச்சு பீ.ஜே. இலங்கை வருவதை அனுமதிக்கவில்லை என அறியவருகிறது. எனினும் அவர் நவீன சாதனங்களின் ஊடாக சிங்கள மொழி குர்ஆன் வெளியீட்டின் போது தென் இந்தியாவிலிருந்து உரையாற்றவுள்ளார்.
பீ.ஜே. யை இலங்கை வராமல் தடுத்ததற்கான காரணம் எதுவும் தமக்கு சொல்லப்படவில்லை என தெரிவித்த சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத், நல்லாட்சியில் தமக்கு அநீதி இழைக்கபட்டுள்ளதாகவும் சீற்றம் வெளியிட்டுள்ளது.
நல்லாட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பீ.ஜே. இலங்கைவர அனுமதி மறுத்ததன் மூலம் தெட்டத்தெளிவான அநீதி இழைத்துள்ளது. அநீதிசெய்த இந்த அரசாங்கத்திற்கு எதிராக தமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மிகவிரைவில் தவ்ஹீத் ஜமாத் அறிவிக்கவுள்ளது.
எமக்கு நல்லாட்சியில் அநீதி இழைக்கபட்டுள்ளது. இது முழு இலங்கை முஸ்லிம்களுக்குமான அநீதியாகவே நோக்குகிறோம். உரிய பதிலடிகளை விரைவில் அறிவிப்போம் எனவும் இதன்போது ரஸ்மின் மௌலவி கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares