SLTJ சகோதரர்களே…! இது உங்களின் கவனத்திற்கு..!!

ஹெம்மாதகமை சேர்ந்த ஒரு சகோதரன் எமக்கு அனுப்பிய கட்டுரை

-Haniffa Husni-

ஹெம்மாதகமை பல்லிவாயல்களின் ஒன்றியம், மத நல்லினக்கத்துக்கான ஒன்றியம் போன்ற பல அமைப்புக்கள் ஹெம்மாதகமை வாழ் மக்களுக்கிடையில் சகவாழ்வையும் , புறிந்துணர்வையும் ஏற்படுத்தி பொருளாதார, கல்வி , அரசியல், சுகாதார முன்னேற்றத்துக்காக பல செயற்திட்டங்களை அமுல்படுத்தி ஓரளவு முன்னேரும் பொழுது ஏன் வழமையை போன்றே ஹெம்மாதகமையின் சூழ்நிலையையோ மக்களின் மனொநிலையையோ வாசிக்காமல் குட்டையை குழப்பி சமூகத்தை பலிகடாவாக்கும் எவ்வகையிலும் பொருத்தமில்லாத செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றீர்கள்?.

ஹெம்மாதகமையில் மாத்திரமல்ல முழு இலங்கையிலுமே நாட்டில் இப்பொழுது மூன்டிருக்கும் இனவாத பணிப்போர் சூழ்நிலையில் “”மாற்று மத சஹொதரர்களுக்கான பகிரங்க கேல்வி பதில் நிகழ்ச்சி “” பொருத்தமில்லாத தன் மூக்கை தானே உடைத்து கொள்கின்ற மடத்தனமான ஒரு நிகழ்ச்சி “‘ பிக்ஹுல் அகல்லியாத் ” சிருபான்மை இனத்துக்கான் பிக்ஹ் பகுதியையும் , “” பிக்ஹ் தஃவா” அழைப்பியல் பிக்ஹ் போன்றவற்றை ஆழமாக வாசித்துவிட்டு,
இலங்கைபோன்ற நாட்டுக்கு பகிரங்க விவாதமும், வேற்றுமை கோஷமும், மாற்றுமத சகோதரர்களுக்கான பகிரங்க கேள்வி பதில் நிகழ்சியும் பொருத்தமானதா? என முடிவெடுங்கள்.

ஏனென்றால் இலங்கை ஸ்வூதியை போன்று பெரும்பான்மை முஸ்லீம் நாடு அல்ல.

நேற்றைய உங்களது நிகழ்சியை “”bbs”” குழப்பிவிட்டதாக சொல்கின்றீர்கள் , உங்களது பார்வையில். வெருமனே ஒரு கேள்வி, பதில் நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர்களது பார்வையில் “” மதம் மாற்று செயற்திட்டம் “” என்பதை புறிந்து கொள்ளுங்கள் ஹெம்மாதகமை பிரதேசத்தில் முதன்மையாக செய்ய வேண்டியது விவாத மேடைகளோ , மார்க்கத்தை நிர்பந்தப்படுத்தும் செயற்பாடுகள் அல்ல.

6 ஆம் கல்வித்தரத்தில் கல்வி கற்கும் சிரார்கள் கூட அடிமையாகியிருக்கும் ஏன் அதைவிட கேவலம் சில யுவதிப் பெண்கள் கூட ஆர்வம் காட்டத் துவங்கியுள்ள போதைப் பொருள் பாவனை ஹெம்மாதகமை யை விட்டும் ஒழிக்கப்படவேண்டும்.

* பல முஸ்லீம் சகோதரிகளை வட்டிக்கு கடன் எடுத்து, தம் வயிற்றுப்பசியை தீர்துக் கொள்வதற்கு நிர்பந்த நிலையை தோற்றுவித்திருக்கும் படுமொசமான வறுமையை ஒழிப்பதற்கு ஒர் செயற்திட்டம் வரையப்படுதல்,

இன்னும் ஏராலாமான முதன்மையாக, அவசரமாக செய்ய வேண்டிய ஏராலமான மார்க்கப் பனிகள் உள்ளன. இவைகளை செய்து பாருங்கள்

ஹெம்மாதகமை வாழ் மக்கள் உங்கள் இயக்கத்தையும் உங்கள் இயக்க தலைமைகளையும் செங்கம்பலம் விரித்து மாலை போட்டு வரவேற்பார்கள். தஃவா செய்ய வேண்டும் என்ற வேட்கை மட்டும் இருந்து பொதாது யாருக்கு? எந்த சந்தர்ப்பத்தில் ? எதனை ? எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஹிக்மத்தும் தேவை…!

You may also like...

3 Responses

 1. Badurdeen Ajwad says:

  awerhal muthenmaiyanathum unmaiyanathumane dawa paniyaithan seihirarhal neengal saththiyaththai aliththuwida muyatchchikkreerhal neegal ethatku payappaduhireerhalo athu inthappaniyai wittu othunginalthan etpadum.

 2. Roomy says:

  Haneefa Husni Siranda Oru Aaiwalar??????

 3. nizamhm1944 says:

  ஒருவன் இஸ்லாமிய வழியில் தன்னை ஈடுபடுத்தி உதாரண புருஷனாக வாழ்வதைவிட சிறந்த தஃவாப் பணி இருக்க முடியாது.

  அதனால்தான் அல்லாஹ், தனது தூதரை அழகிய முன்மாதிரியாகப் படைத்திருக்கின்றான் என்பதையாவது
  அறிந்தால் இஸ்லாத்தை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம் என்பது விளங்கும்.

  இஸ்லாம் வளர்ப்பதற்காகத் தரப்பட்ட மார்க்கம் அல்ல. நமது பின்பற்றலுக்காக அல்லாஹ்வின் பாதுகாப்புடன் முழுமையான அருட் கொடையாக அருளப்பட்ட மார்க்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *