“Uplift Education” இன் இந்த ஆண்டிற்கான Volunteer Reunion 2015

Camp ஆனது மிக சிறப்பான முறையில் அநுராதபுர மாவட்டத்திலுள்ள கட்டுக்கலியாவ என்ற இடத்தில் நவம்பர் 21, 22 ஆகிய தினங்களில் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக Uplift Education Team நாட்டினுடைய பலபாகங்களில் உள்ள பாடசாலைகளில் நாடுதழுவிய ரீதியில் மாணவர்களுடைய கல்வி அபிவிருத்தி தொடர்பாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது.

அந்த வகையில் Maths Camp, Physics Camp, Robotics Camp மற்றும் பல கருத்தரங்கு, ஊக்குவிப்பு நிகழ்ச்சி போன்ற வேலைத்திட்டங்களை செய்து இன, மத வேறுபாடு பாராது நாட்டிலுள்ள தமிழ், சிங்கள மொழிமூலம் அனைத்து இன பாடசாலைகளிலும் பல வேலைத்திட்டங்களை செய்து மூன்று ஆண்டுகளில் பாரிய அடைவுமட்டங்களை கண்டுள்ளது.

அந்த வகையில் அடைவுமட்டம் குறைவான இடங்களில் சிறந்த பல அடைவுகளை கண்டு பாரிய ஒரு முன்னேற்றத்தை கண்டுள்ளது. அந்த வகையில் இந்த வேலைத்திட்டங்களை நாடு தழுவிய ரீதியிலிருந்து ஆர்வமுள்ள பல பல்கலைக்கழக மாணவர்களும் சமூகத்தில் உள்ள இளைஞர்களும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் தன்னார்வத் தொண்டர்களாக பங்குபற்றியுள்ளனர்.

இந்த தன்னார்வத் தொண்டர்களை ஒன்றிணைப்பதற்கும் புதிய நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்குமே இந்த Volunteer Reunion Camp நடைபெறுகின்றது. அத்துடன் இவ் Volunteer Reunion Camp பல சிறப்பு நிகழ்வுகளை கொண்டுள்ளது. இது 3 கட்டங்களை கொண்டதாக காணப்பட்டது. அவை மலையேறுதல், நடைபவனி செல்லல், முகம் அமைத்தல் போன்றவைகளாகும். இந்நிகழ்வில் அடுத்த வருடத்துக்கான திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் குழு செயற்பாடுகளும் இடம்பெற்றன.

Volunteers Reunion 15 (1) Volunteers Reunion 15 (3) Volunteers Reunion 15 (2) Volunteers Reunion 15 (4)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares