மாவனல்லைக்கு பெருமை சேர்த்த சிரேஷ்ட ஊடகவியலார்களை கௌரவிக்கும் நிகழ்வு

சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவனல்லைக்கு பெருமை சேர்த்த சிரேஷ்ட ஊடகவியலார்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாவனல்லை சாஹிரா கல்லூரியில் நடைபெற்றது.

இதன் போது கலாபூஷணம் என்.எம் அமீன், ஊடகத்துறை ஊடாக கேகாலை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை மற்றும் தென்றல் அலைவரிசை முன்னாள் பணிப்பளார் மர்ஹூம் நூராணியா ஹசன், சிரேஷ்ட ஊடகவியலார் மர்ஹூம் உயன்வத்தை ரம்ஜான், மூத்த ஊடகவியலாளர் றிஸ்கி ஷெரீப், வசந்தம் செய்தி ஆசிரியர் சீத்தீக் ஹனீபா மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹுசைன் ஆகியோர் சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்தினரால் பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் ஸைத், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரின் பாரியார் திருமதி ரீஸா ஹமீதுல்லாஹ், முன்னாள் அமைச்சர் அதாவுத செனவினரத்தின, போரத்தின் பொதுச் செயலாளர் சாதிக் சிஹான், இலக்கியப் புரவலர் ஹாசீம் உமர், சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத் தலைவர் ஆஸிக் நிஸாமுதீன் மற்றும் பழைய மாணவர்கள், கல்லூரியின் பிரதி அதிபர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி கம்மிடி உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், X Zahirians அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த இரு ஊடக செயலமர்வுகள் மாவனல்லை ஆஇஷா சித்தீகா மற்றும் மாவனல்லை சாஹிரா ஆகிய பாடசாலைகளில் கடந்த (01.12.2018) சனிக்கிழமை அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மாவனல்லையில் இடம்பெற்றது.

மாவனல்லை வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில் தெரிவு செயப்பட்ட மாணவர்களுக்கான செயலமர்வு சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்துடன் இணைந்து சாஹிரா ஆரம்ப வித்தியாலய கேட்போர் கூடத்திலும் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற போரத்தின் 61 மற்றும் 62 ஆவது செயலமர்வுகளில் நாட்டில் அனுபவம் வாந்த முன்னணி ஊடகவியலாளர்களால் விரிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதன் போது செயலமர்வுகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு போரத்தினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் ஸைத், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரின் பாரியார் ரீஸா ஹமீதுல்லாஹ் ஆகியோர் சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் போரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோரினால் கல்லூரியின் நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் கல்லூரியின் பிரதி அதிபரிடம் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.