குச்சவெளி பகுதிகளில் உள்ள சமூக நிறுவனங்களுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சில சமூக நிறுவனங்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன .

குறித்த தளபாடங்கள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான அப்துல்லா மஹரூப் அவர்களால் குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று (07) வழங்கி வைக்கப்பட்டது.

தனது 2018 ம் ஆண்டின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து குறித்த தளபாடங்கள் வழங்கப்பட்டன .

புல்மோட்டை மஸ்ஜிதுல் நூரானியா பள்ளிவாயல் உட்பட 05 சமூக நிறுவனங்களுக்கே இவ்வாறு தளபாடங்கள் வழங்கப்பட்டன .தலா 50000 ரூபா பெறுமதியான மொத்தமாக 250000 ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கப்பட்டன.

இவ் நிகழ்வில் குச்சவெளி பிரதேச செயலாளர் பீ.தனேஸ்வரன்,குச்சவெளி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னால் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.தௌபீக் உட்பட பலர் பங்கேற்றனர்.(அ)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

Leave a Reply

You must be logged in to post a comment.