அக்குறணை பிரதேச சபையினால் உலர் உணவு பொருட்கள் சேகரிக்கும் வேலைத்திட்டம்

 

வட மாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென உலர் உணவு பொருட்கள் சேகரிக்கும் வேலைத்திட்டமொன்று அக்குறணை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டன.

அக்குறணை பிரதேச சபை தலைவர் ஐ.எம்.இஸ்திஹாரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தினூடாக அரிசி ஐந்து கிலோ அடங்கிய பொதிகள் முப்பது (30) மற்றும் சீனி ஒரு கிலோ அடங்கிய பொதிகள் ஐம்பது (50) உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்படுள்ளன.

குறுகிய காலத்தில் சேகரிக்கப்பட்ட இவ்வுலர் உணவு பொருட்கள் மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று கையளிக்கப்பட்டது.

இவ்வாறு மத்திய மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக சேகரிக்கப்படும் உலர் உணவு பொருட்கள் விரைவில் உரிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர் காரியாலயங்கள் ஊடாக வினியோகம் செயவற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

-ராபி சிஹாப்தீன்-

Leave a Reply