‘சிறகடிக்கும் நிலவு’ நூல் வெளியீட்டு நிகழ்வு

கவிதாயினி அப்ரா இல்யாஸ் எழுதிய ‘சிறகடிக்கும் நிலவு’ கவிதைத் தொகுப்பு கடந்த வெள்ளியன்று(28) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழிப் பீட கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழிப் பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றத்தின் தலைவர் எஸ்.எல்எம். நபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் பிரதம அதிதியாக களந்துகொண்டார்.

நிகழ்வின் கௌரவ அதிதியாக தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழிப் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம்.மஸாஹிர் கலந்துகொண்டதோடு, சிறகடிக்கும் நிலவின் ஆசிரியர் அறிமுகத்தை கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் மற்றும் நூல் விமர்சனத்தை கலாநிதி யோகராஜா ஆகியோர் நிகழ்த்தி வைத்தனர்.

மாவனல்லை பெலிகமனையைச் சேர்ந்த கவிதாயினி அப்ரா இல்யாஸ் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழிப் பீடத்தின் விடுகை வருட மாணவி என்பதோடு ஏ.ஏ.எம்.இல்யாஸ் மற்றும் ஆசிரியை எம்.எஸ்.என்.ஹம்ஸியா தம்பதிகளின் மகளும் ஆவார்.

Leave a Reply

You must be logged in to post a comment.