பூமிக்கு அருகாமையில் புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு

நாசா விண்வெளி மையம் பூமிக்கு அருகாமையில் கிரகம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளது.

 

நாசா விண்வெளிமையமானது விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் என்பனவற்ளை கண்டறிகதற்காக கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கை கோள் ஒன்றை விண்ணுக்கு செலுத்தியது.

இந்த செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது.

இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்ட கிரகமானது மிக சிறியதாகும் இதற்கு எச்டி 21749 பி என பெயரிடப்பட்டுள்ளதோடு இக்கிரகம் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

இந்த கிரகத்தின் அருகே அதிக வெளிச்சத்துடன் கூடிய நட்சத்திரம் காணப்படுவதாகவும் இது குளிர்ச்சியான கிரகம் எனவும்,பூமியை விட 3 மடங்கு பெரியதாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இக் கிரகத்தில் பாறைகள் மற்றும் உயிரினங்கள் வாழ தகுதியுடையவை. இங்கு அதிகளவில் கியாஸ் நிரம்பியுள்ளது. நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை போன்று அடர்த்தியான வளி மண்டலத்தால் ஆன இங்கு அதிக அளவு நைட்ரஜன் வாயு உள்ளது.

எனவே இங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டயானா டிரகோமர் தெரிவித்துளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply