வின்டோஸ் இயங்குத்தளத்தின் புதியவகை வைரஸ் தாக்கம்

வின்டோஸ் இயங்குத்தளத்தின் ஊடாக புதிதாக வைரஸ் ஒன்று பரவி வருவதாக, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வின்டோஸ் 7/8.1 மற்றும் 10 ஆகிய தளங்களில் இந்த வைரஸ் தாக்கம் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக, குறித்த பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்தார்.

அத்தோடு இலவசமாக வலைத்தளங்களிலிருந்து பதிவிறக்கப்படும் மென்பொருளினூடாகவே இது அதிகளவில் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், வின்டோஸ் தளத்தை புதுப்பிக்கும் பட்சத்தில் இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாதென்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.