நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் அல்லை – இம்ரான்கான்

நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் கடந்த வாரம் விமான தாக்குதலில் தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில் ‘அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார்’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.
இம்ரான் கானின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் இம்ரான் கானின் முன்னெடுப்பைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் ட்விட்டரில் அதுதொடர்பான ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace ஆகிய ஹேஷ்டேகுகள் பரவலாகப் பதிவிடப்பட்டன.
இந்த நிலையில் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில்” நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களது விருப்பப்படி அமைதி மற்றும் துணை கண்டத்தில் வளர்ச்சி யார் ஏற்படுத்துகிறார்களோ அவரே நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர்” என்று பதிவிட்டுள்ளார்.