மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்தின் (OZMA) பொது கூட்டம்

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் ஊடக சங்கத்தின் (OZMA) வருடாந்த பொது கூட்டம் கல்லூரி அதிபர் ஜவாட் தலைமையில் ஞாயற்றுக்கிழமை (24/03/2019) காலை 9 மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இப்பொதுக் கூட்டம் மிகவும் விருவிருப்பாகவும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் 2019-2020 ஆண்டுக்கான நிர்வாக தெரிவு இடம்பெற இருப்பதோடு ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் தெரிவாகும் பழைய மாணவர் ஊடக சங்கத்துக்கும் உள்ளமையால் இம்முறை பொதுக் கூட்டத்துக்கு அதிகளவான பழைய மாணவர்கள் ஆவலுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூற்றாண்டு விழா ஏற்பாடுகளில் தமது பங்களிப்பையும் கல்லூரிக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பலர் இம்முறை பழைய மாணவர் ஊடக சங்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், தெரிவாகும் பழைய மாணவர் ஊடக சங்கம் நிர்வாக குழு பாடசாலைக்கும், பாடசாலையின் எதிர்காலத்துக்கும் நன்மை தரும் வகையிலேயே அமைய வேண்டும் என்பதே பழைய மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்

Leave a Reply

You must be logged in to post a comment.