விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அசாஞ்சேவை கைது செய்த பொலிஸார் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விதிகளை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறியதால், அவருக்கு தாங்கள் தஞ்சம் வழங்கியதை திரும்பப்பெறுவதாக ஈகுவேடார் நாட்டின் ஜனாதிபதி லெனின் மொரீனோ தெரிவித்துள்ளார்.

ஆனால் இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ட்விட் செய்தியில், சர்வதேச சட்டவிதிகளை மீறி அசாஞ்சேக்கு தஞ்சம் வழங்கப்பட்டதை சட்டவிரோதமாக ஈகுவேடார் இரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply