இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை

டெல்லி அணியை  6 விக்கெட்டுக்களினால் வீழ்த்திய சென்னை அணி இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

 

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டிணத்தில் 2 ஆவது சுற்று வெளியேற்றல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 147 ஓட்டங்களை குவத்தது.

148 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணிக்கு ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய வோட்சன் மற்றும் டூப்பிளஸ்ஸி நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

அதன்படி முதலில் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணி முதல் 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களை குவித்தது, அதனையடுத்து டூப்பிளஸ்ஸி அதிரடிகாட்ட சென்னை அணி 7.1 ஓவரில் 50 ஓட்டங்களை கடந்ததுடன், டூப்பளஸ்ஸியும் 9.3 ஆவது ஓவரில் மொத்தமாக 37 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்கைள பெற்றார்.

 

எனினும் அவர் 10.1 ஆவது ஓவரில் டிரெண்ட் போல்டின் பந்து வீச்சில் கீமோபவுலிடம் பிடிகொடுத்து 50 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரய்னாவுடன் கைகோர்த்த வோட்சன் அதிரயான ஆட்டத்தை ஆரம்பிகஙக 11.5 ஆவ ஓவரில் ஒரு ஆறு ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது. அது மாத்தரமன்றி அந்த ஓவரின் இறுதிப் பந்தில் மேலும் ஒரு ஆறு ஓட்டத்தை பெற அவர் மொத்தமாக 31 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இருப்பினும் அவர் 12.2 ஆவது பந்து வீச்சில் வோட்சன் 50 ஓட்டத்துடனே ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் சென்னை அணி 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது.

 

மூன்றாவது விக்கெட்டுக்காக ரய்னா மற்றும் ராயுடு துடுப்பெடுத்தாடிவர சென்னை அணி 15 ஓவரில் 119 ஓட்டங்களை குவிக்க 15.6 ஆவது ஓவரில் ரய்னா 11 ஓட்டத்துடன் அக்ஸர் படேலின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார் (127-3).

அதையடுத்து தோனி களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர வெற்றிக்கு இரண்டு ஓட்டங்கள் மாத்திரமே தேவை என்ற நிலையிருக்க 18.4 ஆவது ஓவரில் இஷான் சர்மாவின் பந்து வீச்சில் 9 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து பிராவோ களமிறங்கி துடுப்பெடுத்தாட சென்னை அணி 19 ஆவது ஓவரில் டெல்லி அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் ராயுடு 20 ஓட்டத்துடனும், பிராவோ 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.