ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனிருத்த தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தீர்வு கண்ட பின்னர் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலவச சுகாதாரத்துறையானது பல கேள்விகளுக்கு இன்று உள்ளாகியுள்ளமையினை சுட்டிகாட்டிய இவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.