நாளை நண்பகல் 12 மணி வரை அவகாசம் – ஞானசார தேரர்

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவிகளிலிருந்து நீக்குவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை (03) நண்பகல் 12 மணி வரை அவகாசம் தருவதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அவ்வாறு நடைபெறாது போனால், அனைத்து மகா சங்கத்தினரையும் இணைத்துக் கொண்டு, நாடு முழுவதும் இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தேரர் கூறியுள்ளார்.

எந்தவிதமான அரசியல் பேதங்கள் இருந்த போதிலும், முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு எதிராக கொண்டு செல்லும் இந்த நடவடிக்கைகளுக்கு எந்தவொரு தரப்பினருடனும் நிபந்தனையில்லாது இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.