மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் – ஐ.நா செயலாளர்

வறிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காட்டுத்தீ போன்று பரவக்கூடியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஒற்றுமை தார்மீகக் கடமை அல்லவெனவும் அது ஒவ்வொருவரினதும் சுயவிருப்பின் பேரில் கடைப்பிடிக்கப்பட வேண்டியதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

9000 உயிர்களை காவு கொண்டுள்ள சுகாதார பேரழிவு நிலைக்கு பதிலளிக்க சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தையும் குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார பேரழிவு நிலைமையில் இருந்து உடனடியாக விலகிச்செல்வதுடன் நிலைமையை சமாளிக்க போதிய தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளத் தவறிய நாடுகளுக்கு உதவ வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர G – 20 நாடுகளிடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குடட்ரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.