மாவனல்லை மயூரபாத கல்லூரி மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

மாவனல்லை அங்வாரம் பிரதேசத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் கடமையாற்றிவரும் தாதியொருவருக்கும் அவரது கணவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாதியின் பிள்ளை மயூரபாத கல்லுரியில் தரம் 6ல் கல்வி கற்பதால் குறித்த வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள்,அந்த வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த தாதியின் பிள்ளைகளுக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

மாவனல்லையில் இதுவரை 42 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Leave a Reply

You must be logged in to post a comment.