தெவனகல விவகாரம்: விஷேட குழு நியமிக்க ஆளுனர் உறுதி

தெவனகலை புராதன விஹாரைக்கு சொந்தமான புனித பூமிக்கான தொல் பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்திற்கான 400 மீட்டர் பர்ஸோன் சுற்றுவட்டத்தில் உள்ள காணிகளை அளவிட்டு எல்லை குறிப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க கேகாலை மாவட்ட அரசாங்க அதிபர் மஹிந்த சமன் வீர சூரியவின் தலைமையில் விஷேட குழுவை நியமிக்க சபரகமுவ மாகாண சபையின் ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ நேற்று 2020 டிசம்பர் 24 ஆம் திகதி உறுதியளித்தார்.

தற்போது தெவனகலை விஹாரைக்கு சொந்தமானதாக கூறப்படும் தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை அடையாளர் காண்பதில் 400 மீட்டர் பபர் ஸோன் எல்லையை நிர்ணயித்து அளவீடு செய்வது தொடர்பாக பிரதேச மக்களுக்கு அறிவூட்டுவதற்கான கூட்டம் ஆளுனர் தலைமையில் நேற்று 24 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு அரனாயக்க பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே ஆளுனர் இந்த உறுதி மொழியை வழங்கினார்.

பபர் ஸோன் என்று வரையறுக்கப்பட்டுள்ள 400 மீட்டர் எல்லை பிரதேசத்திற்குள் வாழும் காணிகளின் உரிமையாளர்களர்களான சிங்கள, முஸ்லிம் தரப்பினர் அனைவரும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப் பட்டிருந்தனர். இங்கு உரையாற்றிய உயர் அதிகாரிகள் 400 மீட்டர் பபர் ஸோன் எல்லையை நிர்ணயித்து அளவீடு செய்வது தொடர்பாக உரிய காணிகளின் சொந்தக்காரர்களுக்கு விளக்கமளித்தனர். இறுதியில் பிரதேசவாசிகளுக்கு கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்போது உரையாற்றிய பிரதேசவாசிகள் இந்த பபர் ஸோன் காரணமாக அவர்களது காணிகளை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆனாலும் இப்பிரதேசத்தில் வசித்து வரும் அனைவரும் அவர்களது காணிக்கான பூரணமான உரிமையைக் காட்டக்கூடிய காணி உறுதிகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த பபர் ஸோன் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் அதற்கு பிரதேச மக்கள் ஒருபோதும் இடமளிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இந்த பபர் ஸோன் எல்லைக்குட்பட்ட பிரதேசவாசிகளில் ஒருவரான அரனாயக்க பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினரான அஜந்த திசாநாயக்கா உரையாற்றுகையில் அவரிடம் 800 வருடங்கள் பழமைவாய்ந்த அப்போதைய மன்னரால் வழங்கபப்ட்ட காணி அன்பளிப்புக்கான சன்னஸ் பத்திரம் இருக்கின்றது. அதன் மூலமே காணி உரிமை கிடைத்திருக்கின்றது. அதற்கான மதிப்பு என்ன என்று கேள்வி எழுப்பினார். இந்த காணி விவகாரத்தால்; இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் பிளவுபட்டுள்ளனர். தெவனகலை விஹாரையில் பூஜைகளோ விளக் கேற்றுவதோ இல்லை. மக்கள் விஹாரைக்கு அன்னதானம் வழங்காமல் புரக்கணிக்கின்ற அளவிற்கு நிலைம மாறி இருக்கின்றது என்று கண்டித்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் மெதிரிகிரியே புஞ்ஞசார தேரர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. பாதுகாப்பு தரப்பினரும் வருகைதந்திருந்த உயர் அதிகாரிகளும் தேரரை சமாதானப்படுத்தினர். 400 மீட்டர் பபர் ஸோன் சுற்றுவட்டார காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சமூகமளித்திருந்த பிரதேச வாசிகள் தொவித்தனர். ஏற்கனவே 85 ஏக்கர் என்ற அடிப்படையில் அளவீடு செய்து வேறுபடுத்தப்பட்டுள்ள காணிகளிலும் 258 சிங்கள குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளும் 40 இற்குட்பட்ட முஸ்லிம்களது காணிகளும் உள்ளன. இந்த 400 மீட்டர் எல்லை சுற்றுவட்டார அளவீடு நிகழுமானால் அதனாலும் அதிகமான பெரும்பான்மை இன சிங்கள மக்களே பாதிக்கப்பட உள்ளனர் என்று தொவிக்கப்படுகின்றது. அதனாலே கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் உரையாற்றிய ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ தொவிக்கையில் இந்த பிரதேசத்தில் காணிகளுக்கான உரிமையுடன் வாழும் சிங்களவர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ அவர்களது உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிப்பதில். அதனல் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கான குழுவொன்றை நியமிப்பதாக உறுதியளித்தார். அந்த குழு மூலமே பபர் ஸோன் சம்பந்தமான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
இந்த கூட்டத்திற்கு பௌத்த விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன், காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.கே. ரணவக, பௌத்த விவகார ஆணையாளர் சுனந்த காரியப்பெரும, மாவனல்லை பிரதேச செயலாளர் பிரியங்கனீ பெதங்கொட, அரனாயக்க பிரதேச செயலாளர் மொஹமட் பைசர் உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர். அத்துடன் சர்ச்சைக்குரிய காணிகளுக்கான உரிமையாளர்களான சிங்கள மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

-எம்.எஸ். அமீர் ஹசைன்-

 

Leave a Reply

You must be logged in to post a comment.