மாவனல்லையில் பெருமளவு வெடிபொருட்கள் திருட்டு

மாவனெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து திருப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்களை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெடிபொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படும் மாவனெல்ல-மொல்லியகொட கற்பாறை உடைக்கும் இடத்தின் உரிமையாளர் இது தொடர்பில் டிசம்பர் 22 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கேகாலை மாவட்ட செயலாளர் மற்றும் சபரகமுவ மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களில் 15 கிலோகிராம் அமோனியம் நைட்ரேட், 750 கிராம் வோட்டர்-ஜெல் வெடி, 20 டெட்டனேட்டர்கள் மற்றும் 35 மீட்டர் டெட்டனேட்டர் தண்டு ஆகியவை அடங்குகின்றன.

இந்தநிலையில் குறித்த இடத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உட்பட சுமார் 30 பேர் இதுவரை பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.