மாவனல்லையில் இரண்டு இடங்களில் புத்தர் சிலை மீது தாக்குதல்

மாவனல்லை ஹிங்குல பகுதியில் கொழும்பு கண்டி வீதியில் அமைந்துள்ள புத்தர் சிலையொன்றின் பாதுகாப்புக்காக போடப்பட்ட கண்ணாடி இன்று (29) அதிகாலை இனம்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மூன்று நாட்களுக்கு முன்னர் அலுத்நுவர பகுதியில் உள்ள புத்தர் சிலையொன்றின் பாதுகாப்புக்காக போடப்பட்ட கண்ணாடியும் இனம்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் மாவனல்லை நியூஸிக்கு தெரிவித்தனர்.

இதேபோன்ற சமபவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாவனல்லையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்களை கைது செய்ய மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை சில தினங்களுக்கு முன்பு மாவனெல்லை மொல்லியகொட பிரதேசத்தில் கற்குவாரியில் இருந்த வெடிபொருள் திடீரென காணாமற்போன விவகாரம் பற்றி குற்றப்புலனாய்வு பிரிவின் 5 சிறப்பு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply