மாவனெல்லை, போவெல்ல பகுதியில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

மாவனெல்லை, போவெல்ல பகுதியில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழகி உயிரிழந்துள்ளனர்.

இன்று (21) மாலை 3.30 மணியளவில் 07 இளைஞர்கள் சென்றிருந்த நிலையில் மாஓயாவில் நீராட சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

24 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply