மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸாருக்கு கொரோனா தொற்று

மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த பொலிஸ் நிலையம் தற்காலிகமாக இன்று (20) காலை மூடப்பட்டிருந்தது.

மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸாருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றுக்குள்ளான இரண்டு பொலிஸாரும் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 76 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்பொழுது பொலிஸ் நிலையம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு ஏனைய பொலிஸ் நிலையங்களில் இருந்து அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு மாவனெல்ல பொலிஸ் நிலையம் மீண்டும் இன்று மாலை (20) திறக்கப்பட்டுள்ளது.

Comments are closed.