மாவனல்லை மண்சரிவில் சிக்கிய நால்வரில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு

மாவனல்லை , தெவனகல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த நால்வரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை அவர்களது மகள் (23) மற்றும் மகன் (29) ஆகியோர் இவ்வாறு காணாமல்போயிருந்த நிலையில், 23 வயதான மகள் மாத்திரம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மண்சரிவுக்குள் சிக்கி காணாமல்போயுள்ள ஏனையோரை தேடும் பணிகளை மீட்புக் குழுவினர் தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.