மாவ­னெல்லை சாஹிரா கல்­லூ­ரியில் தனது சேவையை ஆரம்­பித்­த பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில்

“இஸ்­லாத்தில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்ற பிரி­வுகள் கிடை­யாது. இஸ்லாம் முழு­மை­யான ஒரு வாழ்க்கைத் திட்டம். அது முழு­மை­யான ஒரு கல்வி முறையின் பெரு­மை­யையும் அவ­சி­யத்­தையும் பேசு­கி­றது. இஸ்­லாத்தின் ஆரம்ப காலம் முதல் 13 ஆம் நூற்­றாண்டின் இறுதி வரை மார்க்கக் கல்வி கற்ற முஸ்­லிம்கள் விஞ்­ஞானம், வானியல், புவி­யியல், கணிதம், தொழில்­நுட்பம், வைத்­தியம், கட்­டி­டக்­கலை, பொறி­யியல் போன்ற துறை­க­ளுக்கு பெரும் பங்­க­ளிப்­பு­களைச் செய்­துள்­ளனர்” என்று 2020 ஜூன் மாத­ம­ளவில் விடி­வெள்ளி பத்­தி­ரி­கையில் பிர­சு­ர­மான ‘மௌட்­டீகக் கொள்­கை­களால் இலங்­கையில் முஸ்லிம் சமு­தாயம் அழியும் ஆபத்து’ எனும் தனது கட்­டு­ரையில் கலா­நிதி ஹுஸைன் இஸ்­மாயில் குறிப்­பிட்டுள்ளார்.

இலங்­கையில் சம­கால கல்­வி­மா­னாக திகழ்ந்த அவர், எந்த விட­யத்­தையும் பொது­வெ­ளியில் திறம்­பட கூறும் துணி­வு­டை­யவர். சமூக சிந்­தனை, தூர­நோக்கு மற்றும் பொதுப் பார்வை என்­ப­வற்­றைக்­கொண்டு இலங்கை முஸ்லிம்களின் கல்­விக்கு அரும் சேவை­யாற்­றிய கலா­நிதி ஹுஸைன் இஸ்­மாயில் கடந்த வியா­ழக்­கி­ழமை (2021.10.14) அன்று இறை­யடி சேர்ந்தார்.

சில­காலம் நோய்வாய்ப்பற்றிருந்த அவர் கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் கால­மானார். அன்­னாரின் ஜனாஸா கடந்த வியா­ழக்­கி­ழமை மாலை 4 மணிக்கு பேரு­வளை மொல்­லி­ய­மலை ஹில்­ரியா ஜும்ஆ­மாப்­பள்ளி மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.
மர்ஹூம் கனி ஹாஜி­யாரின் புதல்­வ­ரான இவர் 1946 ஆம் ஆண்டு தர்கா நகரில் பிறந்தார். தனது ஆரம்­ப­கல்­வியை மாலி­கா­ஹேன முஸ்லிம் மகா வித்­தி­யா­ல­யத்தில் பெற்­றுக்­கொண்ட அவர் உயர்­தரம் படிக்க கொழும்பு சாஹிரா கல்­லூ­ரியில் இணைந்தார். 1963 ஆம் ஆண்டு பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் உயர் கல்­வியை தொடர்ந்தார். பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலை­மானி பட்­டத்­தையும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்­டப்பின் படிப்­பையும் கலா­நிதி பட்­டத்­தையும் பெற்றார்.

ஆசி­ரியர் பயிற்சி கலா­சாலை

பேரா­சி­ரியர் ஹுஸைன் இஸ்­மாயில் பின்னர் ஆசி­ரியர் நிய­மனம் பெற்று மாவ­னெல்லை சாஹிரா கல்­லூ­ரியில் தனது சேவையை ஆரம்­பித்­த­துடன், அக்­க­ரைப்­பற்று மத்­திய கல்­லூரி உட்­பட சில பாட­சா­லை­களில் பணி­யாற்­றினார். மிக இளம் வயதில் தர்­கா­நகர் முஸ்லிம் பெண்கள் ஆசி­ரியர் பயிற்சி கலா­சா­லையில் விரி­வு­ரை­யா­ள­ராக இணைந்தார்.

திறந்த பல்­க­லைக்­க­ழகம்

அதற்கு பின்னர் இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் விரி­வு­ரை­யா­ள­ரா­கவும் மனி­த­வியல் மற்றும் சமூக விஞ்­ஞான பீடத்தின் பதில் பீடா­தி­யாகவும் செயற்­பட்­ட­துடன், அக் காலப்­ப­கு­தி­யி­லேயே தனது கலா­நிதி பட்­டத்­தையும் பூர்த்தி செய்தார். பின்னர் இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழக கல்வி பீடத்தின் பீடா­தி­ப­தி­யா­கவும் நிய­மனம் பெற்றார். தொடர்ந்து பாலர் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை ஆசி­ரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்­டத்தின் இணைப்­பா­ள­ரா­கவும் பதவி வகித்தார்.

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர்

தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் இரண்­டா­வது உப­வேந்­த­ராக தெரிவு செய்­யப்­பட்ட கலா­நிதி ஹுஸைன் இஸ்­மாயில் இரண்டு தவணை பதவிக் காலத்தை அங்கு பூர்த்தி செய்தார். இவர் தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் உப­வேந்­த­ராக சேவை­யாற்­றிய காலமே அப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பொற்­காலம் என்றும் சொல்­லப்­ப­டு­கின்­றது. நிர்­வாக கட்­ட­மைப்பில் ஊழல் மோச­டிகள் இல்­லாத நிலை­மையை உரு­வாக்கி சிறந்த தலை­மைத்­து­வத்தை வழங்­கினார்.

இந் நிய­ம­னத்­திற்கு முன்னர் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்ற போராட்­ட­மொன்று குறித்த விசா­ரணை குழுவில் பேரா­சியர் ஹுஸைன் இஸ்­மாயில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் மாண­வர்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்க முன்­னின்று உழைத்­த­தாக அர­சியல் ஆய்­வா­ளரும் எழுத்­தா­ள­ரு­மான சிராஜ் மஸ்ஹூர் தனது பதி­வொன்றில் சுட்டிக் காட்­டி­யி­ருந்தார்.

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் இஸ்­லா­மிய கற்­கைகள் பீடத்தை ஸ்தாபித்த ஹுஸைன் இஸ்­மாயில். முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் குவைட் நாட்­டுக்­கான இலங்கை தூது­வ­ராக இருந்த சந்­தர்ப்பத்தில் குவைட் அர­சாங்­கத்தின் நிதிப் பங்­க­ளிப்­புடன் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தை பெரும் அபி­வி­ருத்­திக்கு இட்டுச் சென்றார்.
திட்ட அமு­லாக்க தலை­வ­ராக இருந்து பல்­க­லைக்­க­ழக அபி­வி­ருத்தி மற்றும் சமூக வாழ்­வா­தார அபி­வி­ருத்­திக்­காக குவைட் அர­சாங்­கத்தின் அரபு அபி­வி­ருத்தி நிதி­யத்தின் பங்­க­ளிப்­பையும் உலக வங்­கியின் திட்டம், கனே­டிய சர்­வதேச அபி­வி­ருத்­தியின் உத­வி­யையும் பெற்­றுக்­கொண்டார்.

அத்­துடன், குவைட் அர­சாங்­கத்தின் அரபு அபி­வி­ருத்தி நிதி­யத்தின் 2800 மில்­லியன் ரூபா உத­வி­யுடன் இணைந்த அபி­வி­ருத்­திக்­கான 10 வருட திட்­டத்தை முன்­னெ­டுத்­த­துடன், நோர்வே அர­சாங்­கத்தின் உத­வி­யையும் பெற்று தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த கலா­நிதி ஹுஸைன் இஸ்­மாயில் முன்­னின்று உழைத்தார்.

இவர், 25 வருட காலத்தில் 20,000 பயிற்­று­விக்­கப்­பட்ட ஆசி­ரி­யர்­களை உரு­வாக்க பாடு­பட்­டுள்ளார். அத்­தோடு பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம், கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் மற்றும் இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் 23 வரு­டங்கள் விரி­வு­ரை­யா­ள­ராக கல்விப் புரட்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

இது­த­விர, மலே­சி­யா­வி­லுள்ள மலாயா பல்­க­லைக்­க­ழ­கத்தில் மூத்த ஆராய்ச்­சி­யா­ள­ரா­கவும் மலே­ஷிய விஞ்­ஞான பல்­க­லைக்­க­ழ­கத்தில் கௌரவப் பதவி வகித்­த­துடன் பேரா­சி­ரி­ய­ரா­கவும் சேவை­யாற்­றி­யுள்ளார்.

முஸ்லிம் கல்வி மாநாடு

1963 ஆம் ஆண்டு கொழும்பு சாஹிரா கல்­லூ­ரியில் உயர்­தரம் கல்வி பயிலும் போது இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்­டுடன் தொடர்பை ஏற்­ப­டுத்­திக்­கொண்ட கலா­நிதி ஹுஸைன் இஸ்­மாயில் மர­ணிக்கும் வரை அவ்­வ­மைப்­புடன் இருந்து இந்­நாட்­டுக்கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் சேவை­யாற்­றினார்.

முஸ்லிம் கல்வி மாநாடு ஒரு முழுமை பெற்ற அமைப்­பாகும். சகல முஸ்லிம் எம்.பிமார்­களும் அதில் அங்கம் பெற்­றி­ருக்­கின்­றனர். 2005 ஆம் ஆண்டு அவ்­வ­மைப்பின் தலைமை பொறுப்பை சுமந்த அவர் மர­ணிக்கும் வரை அப்­ப­த­வியில் நீடித்தார். மிகுந்த அர்ப்­ப­ணிப்­பான சிந்­தை­யுடன் இவரின் பணிகள் தொடர்ந்­தன. மாதந் தவ­றாமல் முஸ்லிம் கல்வி மாநாட்டுக் கூட்­டங்­களை மிக கஷ்­டத்­துக்கு மத்தி யில் கூட்டி முஸ்லிம் பிரச்­சி­னை­களை ஆராய்­வ­திலும், தீர்வு காண்­ப­திலும் அவர் நிறைவு கண்டார். பிரதி உப­காரம் எதிர்­பா­ராமல் இலட்சி யப் போக்கில் தமது சேவை­களை செய்தார். கெள­ர­வங்­களை ஒரு­போதும் அவர் எதிர்­பார்க்­க­வில்லை.

கல்வி சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டும்­போது முழு­மூச்­சாக தன்னை ஈடு­ப­டுத்தி இலங்கை முஸ்­லிம்­களின் அபி­லா­சை­களை அதில் உட்­பு­குத்த பாடு­பட்டார்.
அத்­தோடு, கல்வி தொடர்­பான ஆய்­வு­களை மேற்­கொள்­வ­தற்­காக கலா­நிதி ஹுஸைன் இஸ்­மாயில் நீண்ட தூரம் பய­ணிப்பார் என அவ­ரது நீண்ட நாள் நண்பர் பேரா­சி­ரியர் ஹுஸை­மியா கூறினார். சம­கா­லத்தில் கல்வி மற்றும் இஸ்­லா­மிய கல்வி ஆய்வு விட­யத்தில் கலா­நிதி ஹுஸைன் இஸ்­மாயில் தவிர வேறு எவ­ரையும் தன்னால் காண முடி­ய­வில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆய்­வுகள்

இலங்கை மத்­ர­ஸாக்­களின் தோற்றம், வளர்ச்சி பற்­றிய ஆய்வு நூலையும் பேரு­வளை முஸ்­லிம்­களின் வர­லாற்று ஆய்வு நூலையும் தொகுத்துக் கொண்­டி­ருந்­த
­வே­ளையில் கலா­நிதி ஹுஸைன் இஸ்­மாயில் எம்­மை­விட்டுப் பிரிந்­தி­ருக்­கிறார். இது­த­விர முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால பிரச்­சி­னைகள் , தேசிய விவ­கா­ரங்கள் தொடர்­பாக விடி­வெள்ளி மற்றும் தேசிய பத்­தி­ரி­கை­க­ளிலும் தொடர்ச்­சி­யாக ஆய்வுக் கட்­டு­ரைகள், விமர்­சனக் கட்­டு­ரை­களை எழுதி சமூக விழிப்­பு­ணர்வை தூண்­டினார். அத்­தோடு, இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம், முஸ்லிம் சேவை ஊடா­கவும் தனது சிந்­த­னை­களை வெளிப்­ப­டுத்­தி­ய­தோடு விழிப்­பு­ணர்­வையும் ஏற்­ப­டுத்தினார்.

சமூ­கத்­திற்கு சொல்ல வேண்­டிய கருத்­துக்­களை நேர­டி­யாக சொல்லக் கூடிய ஹுஸைன் இஸ்­மாயில் இயக்கம், கட்­சிகள் சாராது நடு­நி­லை­யாக எழுத்துப் பணியை மேற்­கொண்­டி­ருக்­கிறார். சில விட­யங்­களை தைரி­ய­மாக சொல்லி சமூக மட்­டத்தில் மூடி மறைக்­கப்­பட்­டு­வரும் பிரச்­சி­னை­களை பேசு­பொ­ரு­ளாக்கி உரை­யா­டல்­களை தொடங்கி வைத்­துள்ளார். அத்­தோடு, அவ்­வி­வ­கா­ரங்­க­ளுக்கு தீர்வை நோக்கி செல்­வ­தற்­கான ஆலோ­ச­னை­க­ளையும் வழங்க அவர் மறக்க வில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­க­ளுக்­காக தைரி­ய­மாக குரல் எழுப்­பிய அவர் எம் சமூ­கத்தின் பல­வீ­னங்­க­ளையும் சுட்­டிக்­காட்ட பின்­நிற்­க­வில்லை.

பொதுச் சேவை

கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலப்­ப­கு­தியில் இலங்கை பொதுச் சேவை ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்ட அவர் இரண்டாம் தட­வையும் குறித்த ஆணைக்­கு­ழுவில் உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்டார்.

நாட்டின் கல்விக் கொள்­கையை தீர்­மா­னிக்கும் அதி­கா­ர­மிக்க உயர் சபை­யான தேசிய கல்வி ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­ன­ராக அவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். தேசிய கல்வி நிறு­வ­னத்தின் கல்வி விவ­கார சபையின் உறுப்­பி­ன­ரா­கவும் கட­மை­யாற்­றினார்.
இதற்­கப்பால் இஷா­அதுல் இஸ்லாம் அனா­தைகள் இல்­லத்தின் செய­லா­ள­ரா­கவும் தன்னை பொதுப் பணியில் ஈடு­ப­டுத்­திக்­கொண்டார்.

இலங்­கையில் அண்­மைக்­கால சூழ்­நி­லையில் முஸ்­லிம்­களின் கல்வி மேம்­பாட்­டிற்­காக தூர­நோக்­குடன் சிந்­தித்து செய­லாற்றி சமூ­கத்­தையும் சீர்த்­தி­ருத்­தத்தின் பால் தூண்­டிய ஒரு மாமேதை தான் கலா­நிதி ஹுஸைன் இஸ்­மாயில். கடந்த சில வரு­டங்­களாக நாம் பெரும் கல்­வி­மான்­க­ளையும் சமூக சிந்­த­னை­யா­ளர்­களையும் இழந்­து­வரும் நிலையில் கலாநிதி ஹுஸைன் இஸ்மாயிலின் இழப்பானது ஈடு செய்ய முடியாதது என்றே கூற வேண்டும்.

எஸ்.என்.எம்.சுஹைல்

நன்றி – Vidivelli

Comments are closed.