இன்று நள்ளிரவு முதல் இரவு நேர பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மேலும் சில தளர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பமிடப்பட்ட அறிக்கையிலேயே கீழ்க் குறிப்பிடப்பட்ட தளர்வுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன

திருமண மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 100 பேருக்கு மேற்படாமல் திருமண வைபவங்களில் கலந்து கொள்ளமுடியும். மேலும், திறந்த வெளி திருமண நிழ்வுகளில் 150 பேர் கலந்து கொள்ள முடியும் என்பதுடன், மதுபானம் பகிரப்பட அனுமதி இல்லை.

உணவகங்களின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 75 பேருக்கு மேற்படாமல் உணவருந்த அனுமதி மற்றும் திறந்த வெளியாயின் 100 பேருக்கு அனுமதி.

கூட்டங்கள் மற்றும் நிழ்வுகளில், மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 150 பேருக்கு மிகையாகாமல் கலந்துகொள்ள அனுமதி.

இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை அமுல் படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுகிறது

Comments are closed.