மாவனல்லை நகரில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

நாடளாவிய ரீதியில், ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்,மாவனல்லையிலும், போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் கோவிட் தொற்று காரணமாக முடக்கப்பட்டிருந்த பாடசாலை கல்வி செயற்பாடுகள் இன்று (25) வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சென்று கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுப்பட்டனர்.

இருந்த போதிலும் அதிபர், ஆசிரியர்கள் கடந்த 24 வருடங்களுக்கு மேலாக எதிர்கொண்டு வரும் சம்பள முறன்பாட்டை தீர்க்க கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (25) திங்கட்கிழமை வழமையாக பணிக்கு சென்ற ஆசிரியர்கள் மதியம் 02 மணியுடன் பாடசாலை நேரம் முடிந்த பின் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் தமது சம்பள முரன்பாட்டை தீர்க்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வீதியில் இறங்கி மேலும் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது பாடசாலைகளை சேர்ந்த அதிபர், ஆசிரியர்கள் சுலோகங்களை ஏந்தி கோஷமிட்டு தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அந்தவகையில் மாவனல்லை நகரில், இன்று (25), ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், 24வருட காலமாக நிலவிவரும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை பெற்றுதருமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Comments are closed.