கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி இன்று திறக்கப்படும்

மண்சரிவு அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதி இன்று (11) மீண்டும் திறக்கப்படும்.

நேற்றிரவு 10 மணியுடன் மூடப்பட்ட இந்த பகுதி, இன்று (11) பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய, மாவனல்லை நியூஸ் இற்கு தெரிவித்தார்.

பயணிகள் போக்குவரத்தை கருத்திற் கொண்டே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இலகுரக வாகனங்களுக்கு மாத்திரமே இந்த வீதியூடாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாற்று வீதியின் ஊடாகவே கனரக வாகனங்கள் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

One lane of the Colombo-Kandy main road, which was temporarily closed at Pahala Kadugannawa, will be reopened from 1.00 p.m.

However, vehicular movement is allowed only for motorists driving light vehicles, Kegalle District Secretary noted.

Traffic on one lane of Colombo-Kandy main road was suspended at 10.00 p.m. yesterday (November 10) due to risks of earth slips.

Comments are closed.